கொரோனா விதிமுறைகளை மீறிய இந்திய அணியின் நட்சத்திர வீரர்! தனிமைப்படுத்தப்பட்ட 5 முக்கிய வீரர்கள்
அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய வீரர்களில் சிலர் கொரோனா விதிமுறைகளை மீறியுள்ளதால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி அங்கு கொரோனா விதிகளை பின்பற்றி விளையாடி வருகிறது. ஏனெனில் உலகில் கொரோனா தீவிரம் இன்னும் குறையவில்லை.
இதன் காரணமாக அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டில் இருந்து வரும் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதன் பின் அவர்கள் கொரோனா பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
அதன் படி தான் இந்திய அணி வீரர்கள் விளையாடி வருகின்றனர். இந்நிலையில், தற்போது இந்திய அணி வீரர்களான ரோகித்சர்மா, ஷுப்மன் கில், பிரித்வி ஷா, ரிஷப் பந்த், நவ்தீப் சைனி ஆகியோர் கொரோனா விதிமுறைகளை மீறியதாக கூறி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
The wait is over!
— BCCI (@BCCI) January 1, 2021
The Hitman @ImRo45 show is about to unfold.?? #TeamIndia pic.twitter.com/DdagR1z4BN
இந்திய அணியில் நட்சத்திர வீரராக பார்க்கப்படும், ரோகித் சர்மா காயம் காரணமாக அதில் இருந்து மீண்டும், அதன் பின் அவுஸ்திரேலியாவில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, மூன்றாவது டெஸ்ட்டுக்கு தெரிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.