கடற்கரையில் வாலிபால் விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் - விமர்சிக்கும் நெட்டிசன்கள்
ஜாலியாக பீட்சில் வாலிபால் விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர்களை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
வாலிபால் விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி முடிந்த பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் செய்துள்ளனர்.
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாட இருக்கிறது.
இப்போட்டியில் விளையாடுவதற்காக கடந்த வாரம் இந்திய வீரர்கள் ஷர்துல் தாக்கூர், கே.எஸ்.பரத், இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஷ்வால், ருதுராஜ், அஸ்வின், நவ்தீப் சைனி, அக்சர் படேல் உள்ளிட்டோர் வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்டுச் சென்றனர்.
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், வெஸ்ட் இண்டீஸ் உள்ள டொமினிக்கா பீச்சில் இந்திய வீரர்கள் அனைவரும் உற்சாகமாக வாலிபால் விளையாடியுள்ளனர்.
வைரலாகும் இந்த வீடியோவைப் பார்த்த இந்திய ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பயிற்சி செய்யாமல் இப்படி பீச்சில் வாலிபால் விளையாடுவது சரியா என்று கேள்வி எழுப்பி கமெண்ட் செய்து வருகின்றனர்.
Virat Kohli has reached West Indies and has joined Indian Team. ❤️ pic.twitter.com/jkWKiW5GVH
— Akshat (@AkshatOM10) July 3, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |