ஹமாஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை கைப்பற்றிய இந்திய ஹேக்கர்கள்
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், ஹமாஸின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
ஹமாஸின் அதிகாரப்பூர்வ இணையதளம் இந்திய ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலில் இருந்து தற்போது செய்தி வெளியாகி வருகிறது.
காஸாவை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான ஹமாஸின் இணையதளம் இந்திய ஹேக்கர்களால் கடத்தப்பட்டு அகற்றப்பட்டுள்ளதாக பல்வேறு இஸ்ரேலிய சமூக ஊடக கணக்குகள் செய்திகளை பகிர்ந்து வருகின்றன. ஹமாஸின் அதிகாரப்பூர்வ இணையதளம் கைப்பற்றப்பட்டது.
இஸ்லாமிய ஹேக்கிங் குழுக்கள் இஸ்ரேலின் தேசிய மின்சார ஆணையத்தின் இணையதளத்தையும் கணக்காளர் ஜெனரலின் இணையதளத்தையும் ஹேக் செய்ய முயற்சித்தன.
ஆனால் இஸ்ரேலின் சைபர் பாதுகாப்பு கடுமையாக இருந்ததால் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் இந்த ஹேக்கிங் முயற்சி தோல்வியடைந்தது. ஆனால் பதிலடி கொடுத்த இந்திய ஹேக்கர்கள் ஹமாஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை எளிதாக கைப்பற்றினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Hamas Website Hacked, Indian Cyber Force Takes Down Hamas Official Site, Israel Palestinian war, Hamas Attacks on Israel