தரையிறங்கும் போது மோதிக்கொண்ட ஹெலிகொப்டர்கள்; சென்னை நபர் உயிரிழப்பு
chennai man dies at 2 nepal helicopters collide while land: நேபாளத்தில் இரு ஹெலிகொப்டர்கள் தரையிறங்கும் போது மோதிக்கொண்ட விபத்தில் சென்னையை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேபாளத்தில் மோதிக்கொண்ட ஹெலிகொப்டர்கள்
நேபாளத்தின் எவரெஸ்ட் சிகரப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லவும், அவசர மருத்துவ உதவி மற்றும் பொருட்களைக் கொண்டு செல்லவும் சிறிய அளவிலான ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், இன்று நேபாளத்தின் சோலுகும்பு மாவட்டத்தின் பெரிச்சே என்ற இடத்தில் ஃபிஷ்டெயில் ஏர் மற்றும் ஏர் டைனஸ்டி நிறுவனங்களால் இயக்கப்படும் ஹெலிகொப்டர்கள், உள்ளூர் நேரப்படி காலை 8;11 மணிக்கு தரையிறங்கும் போது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதில் பயணித்த சென்னையை சேர்ந்த 45 வயதான வசந்த் குமார் பாலராமராமாடு உயிரிழந்துள்ளார்.பாலராமராமடுவின் உடல், பிரேத பரிசோதனைக்காக லுக்லாவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அதே ஹெலிகொப்டரில் பயணித்த, நியூசிலாந்தில் வசிக்கும் 49 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சைலேஷ் கிருஷ்ண படேல், பிஷ்டெயில் ஏர் நிறுவனத்தைச் சேர்ந்த நேபாள விமானி ரபீந்திர பிரஜாபதி மற்றும் டைனஸ்டி ஏர் நிறுவனத்தைச் சேர்ந்த பிரஜ்வல் கே.சி. ஆகியோரும் காயமடைந்தனர்.
அவர்கள், மீட்பு ஹெலிகொப்டர் மூலம் காத்மாண்டுவில் உள்ள மெடிசிட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Two helicopters crash at Pheriche in Everest region, one dead. TRAGEDY IN THE AIR According to officials, a Fishtail Air helicopter and an Air Dynasty helicopter collided while landing at the Pheriche helipad. “A passenger of Fishtail Air died and a captain sustained injuries,” officials who witnessed the scene said, adding that they were collecting details. The Fishtail Air helicopter was piloted by Captain Prajjwal KC, while the Air Dynasty helicopter was commanded by Captain Rabindra Prajapati. Prajapati was injured, while the deceased foreign tourist has not yet been identified. A Simrik Air helicopter has reached the site, and rescue operations are underway, officials said.
— Rahul Shivshankar (@RShivshankar) November 3, 2026
நேபாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின்படி, ஃபெரிச்சே ஹெலிபேடில் தரையிறங்குவதற்காக ஹெலிபேடை நெருங்கியபோது 2 ஹெலிகொப்டர்களின் சுழல் இறக்கைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டு விபத்து நிகழ்ந்ததாக தெரிவித்துள்ளது.
இரு ஹெலிகொப்டர்களும் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.