ஐக்கிய அமீரகத்திற்கு ஒருமுறை கூட சென்றதில்லை... இருவருக்கு லொட்டரியில் தேடிவந்த பேரதிர்ஷ்டம்
ஐக்கிய அமீரகத்தில் எமிரேட்ஸ் லொட்டரி தற்போது விற்பனையை நிறுத்தி வைத்திருந்தாலும், எஞ்சிய மூன்று லொட்டரிகளில் உலகம் முழுவதிலும் இருந்தும் மக்கள் ஒவ்வொரு வாரமும் கலந்துகொண்டு பெருந்தொகை பரிசுகளை அள்ளுகின்றனர்.
லொட்டரியில் பேரதிர்ஷ்டம்
அந்தவகையில், வெளிநாட்டவர்கள் இருவருக்கு துபாய் லொட்டரியில் பேரதிர்ஷ்டம் தேடி வந்துள்ளது. இந்திய மாகாணம் குஜராத்தில் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருபவர் 35 வயதான முகமது சலீம்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் எமிரேட்ஸ் லொட்டரியில் தமது அதிர்ஷ்டத்தை சோதித்து வந்துள்ளார் முகமது சலீம். கடந்த ஞாயிறன்று நடந்த போட்டியில் 70,000 திர்ஹாம் (இந்திய மதிப்பில் ரூ 15.79 லட்சம்) பரிசை வென்றுள்ளார் முகமது சலீம்.
இதேப் போன்று, ஐதராபாத்தை சேர்ந்தவர் Shaik Anwarmiah. இவரும் இதுவரை ஒருமுறை கூட ஐக்கிய அமீரகம் சென்றதில்லை. 30 வயதான இவர் தமது குடும்பத்தினரின் பிறந்தநாள் இலக்கத்தை குறிப்பிட்டு EASY6 லொட்டரியில் கலந்துகொண்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு
இவருக்கு இரண்டாவது பரிசான 150,000 திர்ஹாம் (இந்திய மதிப்பில் ரூ 33.84 லட்சம்) பரிசாக கிடைத்துள்ளது. ஒரே ஒரு இலக்கம் தவறாக தெரிவு செய்ததால், முதல் பரிசான 15 மில்லியன் திர்ஹாமை தவற விட்டுள்ளார்.
இருப்பினும், தற்போதைய தமது பொருளாதார நெருக்கடிக்கு இந்த தொகை தீர்வாக அமையும் என்றே Shaik Anwarmiah தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |