அமெரிக்காவில் ஒரு நாளைக்கு 73 லட்சம் சம்பாதிக்கும் இந்திய வம்சாவளி! சுந்தர்பிச்சையுடன் இணைந்து சாதனை
அமெரிக்காவில் சிஇஓ ஆக பணியாற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிருத் தேவ்கன், அதிக ஊதியம் பெறும் CEOகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
இந்திய வம்சாவளி சிஇஓ
முன்னணி நிறுவனமான Cadence Systemsயின் சிஇஓ ஆக பணியாற்றி வருபவர் அனிருத் தேவ்கன்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவரது ஒருநாள் வருமானம் 73 லட்சம் (87,737 டொலர்கள்). அதேபோல் ஆண்டுக்கு 264 மில்லியன் டொலர்கள் ஊதியம் பெறுகிறார்.
இதன்மூலம் அமெரிக்காவில் அதிக ஊதியம் பெறும் CEOகளின் பட்டியலில் அனிருத் இடம் பிடித்துள்ளார்.
யார் இந்த அனிருத் தேவ்கன்?
டெல்லி பப்ளிக் பள்ளியில் படித்த அனிருத் தேவ்கன், ஐ.ஐ.டி டெல்லியில் மின் பொறியியல் படிப்பை முடித்தார்.
அதன் பின்னர் அமெரிக்காவுக்கு சென்ற அவர், கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் மின் மற்றும் கணினி பொறியியலில் முதுகலை பட்டத்துடன் முனைவர் பட்டமும் பெற்றார்.
வேலைக்கு முதலில் IBM எனும் IT நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு 10 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து Magma Design Automationயில் சேர்ந்து 6 ஆண்டுகள் பணியாற்றினார் அனிருத்.
அதன் பிறகு தான் 2017ஆம் ஆண்டில் Cadenceயில் சேர்ந்தார். இயக்குநர்கள் குழுவில் சேர்க்கப்பட்ட அனிருத் 2021யில் CEO பதவியைப் பெற்றார்.
தற்போது சுந்தர் பிச்சை உள்ளிட்ட சிறந்த தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரிகளின் பட்டியலில் அனிருத் தேவ்கன் இணைந்துள்ளார்.
AP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |