மைக்ரோசாப்ட் வளாகத்தில் சடலமாக கிடந்த இந்திய பொறியாளர்
அமெரிக்காவின் சிலிக்கன் வேலி பகுதியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு, இந்தியாவை சேர்ந்த 35 வயதான பிரதிக் பாண்டே(pratik pandey) கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்.
மைக்ரோசாப்ட்டில் சடலமாக கிடந்த இந்தியர்
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 19 ஆம் திகதி மாலை அலுவலகத்திற்கு சென்ற அவர், ஆகஸ்ட் 20 ஆம் திகதி அதிகாலை அலுவலகத்தில் சடலமாக கிடந்துள்ளார்.
சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைக்கான அறிகுறி எதுவும் இல்லை எனவும், சாண்டா கிளாரா மருத்துவமனையின் மருத்துவ பரிசோதகர் மருத்துவத்திற்கான காரணத்தை இன்னும் அறிவிக்கவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த மரணம் குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
பிரதிக் பாண்டே அடிக்கடி இரவில் வெகு நேரம் பணி புரிவதாக அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போது அவரின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர அவரது குடும்பத்தினர் முயற்சித்து வருகின்றனர்.
மைக்ரோசாப்ட்டில் தரவுகளை பகுப்பாய்வு செய்யும் பேப்ரிக் பிரிவில் பிரதிக் பாண்டே பணியாற்றி வந்துள்ளார். அதற்கு முன்னதாக வால்மார்ட் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி வந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |