வெளிநாட்டில் புத்தாண்டு தினத்தில் இந்தியருக்கு அடித்த அதிர்ஷ்டம்! பொழிந்த தங்க மழை
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியருக்கு புத்தாண்டு தினத்தில் தங்க மழை பொழிந்துள்ளது. அதன்படி அபுதாபியில் நடந்த பிக் டிக்கெட் எலக்ட்ரானிங் டிராவில் 24 கேரட் கொண்ட 1 கிலோ தங்கத்தை வென்றுள்ளார்.
புத்தாண்டு தினத்தில் அதிர்ஷ்டம்
கரமன்கடில் கிருஷ்ணகுமார் என்ற இந்தியர் Ras Al-Khaimah நகரில் வசித்து வருகிறார். 1994ல் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் கிருஷ்ணகுமார் பொறியாளராக உள்ளார்.
அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக பிக் டிக்கெட்களை வாங்கி வருகிறார். இந்த நிலையில் தான் புத்தாண்டு தினத்தில் அவருக்கு 24 கேரட் கொண்ட 1 கிலோ தங்கம் பரிசு கிடைத்துள்ளது.
Big Ticket
நினைத்து பார்க்கவில்லை
தான் பிக் டிக்கெட்டில் வெற்றி பெறுவேன் என நினைக்கவில்லை என கூறும் கிருஷ்ணகுமார், பரிசை எப்படி செலவிடுவது என்பது பற்றி திட்டமிடவில்லை என கூறினார்.
ஜனவரி மாதத்தில் லொட்டரி சீட்டுகளை வாங்கும் பிக் டிக்கெட் வாடிக்கையாளர்கள் வாராந்திர மின்னணு டிராவில் தானாகவே நுழைவார்கள், அதில் ஒரு வெற்றியாளர் ஒவ்வொரு வாரமும் 1 கிலோ 24 காரட் தங்கப் பரிசைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.