ஒரே நாளில் கோடீஸ்வரனாக மாறிய தமிழர்! வெளிநாட்டு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்
அபுதாபி பிக் டிக்கெட் லொட்டரியில் தமிழர் உள்ளிட்ட பலருக்கு மிகப்பெரிய பரிசுகள் விழுந்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அஜ்மனில் வசிப்பவர் கேரளாவை சேர்ந்த முஜீப் சிராதோடி. இவர் கடந்த மாதம் அபுதாபி பிக் டிக்கெட் லொட்டரியை தனது 9 நண்பர்களுடன் இணைந்து வாங்கிய நிலையில் அவர்களுக்கு அதில் Dh12 மில்லியன் ஜாக்பாட் பரிசு விழுந்துள்ளது.
இந்த பரிசு பணத்தை 10 பேரும் பிரித்து எடுத்து கொள்ளவுள்ளனர். அதன்படி ஒருவருக்கு Dh1.2 மில்லியன் அளவுக்கு பணம் கிடைக்கும். முஜீப் கூறுகையில், இது எதிர்பாராதது. நான் என் வாழ்நாளில் கோடீஸ்வரன் ஆவேன் என்று நினைத்ததேயில்லை.
எனக்கு கடன்கள் அதிகமாக உள்ளது, வெளிநாட்டில் பணிபுரிந்த பிறகு கேரளாவில் சொந்த வீடு கட்ட முடிந்தது. நான் வீட்டுக் கடன்களையும் இப்போது அடைத்துவிடுவேன்.
தற்கொலைக்கு முயன்ற தினேஷ் கார்த்திக்! மனைவி செய்த துரோகம்... தடைகளை தாண்டி உச்சம் தொடும் தமிழன்
என் தந்தை இறந்துவிட்டார், எனக்கு தாய், நான்கு சகோதரிகள், மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர். இரண்டு ஆண்டுகளாக லொட்டரி டிக்கெட்கள் வாங்கி வருகிறேன்.
எனது ரமலான் பிரார்த்தனைகளுக்கு கடவுள் செவி சாய்த்துள்ளார் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
பிக் டிக்கெட்டில் லொட்டரியில் இரண்டாவது பரிசான Dh1 மில்லியனை தமிழர் ஒருவர் தட்டி சென்றுள்ளார். ஆம்! துபாயில் வசிக்கும் விஸ்வநாதன் பாலசுப்ரமணியன் என்பவருக்கே இந்த பரிசு கிடைத்துள்ளது.
072051 என்ற வெற்றிக்கான லொட்டரி பரிசு சீட்டை ஏப்ரல் 26ஆம் திகதி அவர் வாங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.