வெளிநாட்டில் மீண்டும் மீண்டும் தமிழர் மீது பொழிந்த பண மழை! மகிழ்ச்சியில் குழந்தையாக மாறி உற்சாகம்
அபுதாபி லொட்டரியில் தமிழர் ஒருவருக்கு மூன்று வார இடைவெளியில் மீண்டும் பெரிய பரிசு விழுந்துள்ளது.
துபாயில் வசிக்கும் மனோஜ் மதுசூதனன் என்பவருக்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் தான் எமிரேட்ஸ் டிராவில் பெரிய பரிசு விழுந்தது. இந்நிலையில் மீண்டும் சமீபத்திய டிராவில் Dirham 77,777 (ரூ. 77,06,116.66) பரிசு விழுந்துள்ளது.
அதாவது மூன்று வார இடைவெளியில் மீண்டும் மதுசூதனன் மீது பணமழை பொழிந்துள்ளது. அதாவது எமிரேட்ஸ் டிராவில் ஏழு இலக்கங்களில் ஐந்து பொருத்தியதையடுத்து மெகா பரிசை மதுசூதனன் தட்டி சென்றார்.
பணிமனை மேற்பார்வையாளராக பணிபுரியும் மதுசூதனன் கூறுகையில், மூன்று வார இடைவெளியில் மீண்டும் இவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் அடித்ததை என்னால் நம்ப முடியவில்லை.
இரண்டாவது முறையாக பரிசு விழுந்ததாக என் நண்பர் தான் எனக்கு போன் செய்து சொன்னார். இதை நானே உறுதி செய்த போது மகிழ்ச்சியில் என்ன செய்வது என்றே தெரியாமல் குழந்தை போல மாறி துள்ளி குதிக்க ஆரம்பித்தேன்.
பரிசுத் தொகையை தொண்டு நிறுவனங்களுக்கும் ஆதரவளிக்கப் பயன்படுத்துவேன்.மீண்டும் இந்த அதிர்ஷ்ட டிராவில் பங்கேற்பேன். யாருக்குத் தெரியும், நான் மீண்டும் வெற்றி பெறலாம் என கூறியுள்ளார்.