60 வயதில் 12 கோடி ரூபாய்: வெளிநாட்டில் வாழும் இந்தியருக்கு அடித்த அதிர்ஷ்டம்
Indian expat wins Rs 12.9 crore UAE lottery: வெளிநாடொன்றில் வாழும் இந்தியர் ஒருவருக்கு லொட்டரியில் 12.9 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழ்ந்துவரும் இந்தியர் ஒருவருக்கு, லொட்டரியில் 5 மில்லியன் அரபு அமீரக திராம்கள் பரிசாக கிடைத்துள்ளது.
5 மில்லியன் அரபு அமீரக திராம்கள் என்பது இந்திய மதிப்பில் 12,96,81,700.00 ரூபாய், இலங்கை மதிப்பில் 45,33,68,451.15 ரூபாய்!
60 வயதில் 12 கோடி ரூபாய்
இந்தியரான கிஷோர் பாண்டுரங்க ராவ், 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழ்ந்துவருகிறார்.

தற்போது ஷார்ஜாவில் வாழ்ந்துவரும் ராவ், 50 திராம்களுக்கு ஒரு லொட்டரிச்சீட்டு வாங்கியுள்ளார்.
அவருடைய 60ஆவது பிறந்தநாளுக்கு முன், அக்டோபர் மாதம் 3ஆம் திகதி, லொட்டரியில் தனக்கு பரிசு விழுந்துள்ளதை ஊடகங்கள் மூலம் அறிந்துகொண்ட ராவ், எவ்வளவு பரிசு என பார்க்க, 5 மில்லியன் அரபு அமீரக திராம்கள் என தெரியவரவே இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
Say hello to Kishore, our latest AED 5 MILLION Second Prize winner! 🏆 Kishore has a lot to celebrate, especially with his 60th birthday making this winning moment even more memorable!🎉 A big congratulations to Kishore! #TheUAELottery #WinnerSpotlight #DareToImagine https://t.co/PI2kHiN4wn
— The UAE Lottery (@theuaelottery) October 26, 2026
ராவுக்கு உலக சுற்றுவதில் ஆசை, விடயம் என்னவென்றால், அவரது மனைவியும் அவரைப்போலவே உலகம் சுற்றுவதில் விருப்பம் கொண்டவர்.
ஆகவே, கணவனும் மனைவியுமாக உலகம் சுற்றிப்பார்க்க திட்டமிட்டுள்ளார்கள்.
தன் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட விரும்பும் ராவுக்கு நீண்ட காலமாக இன்னொரு பெரிய ஆசையும் உள்ளது. அது, அமீரக தங்க விசா வாங்கவேண்டும் என்பது. ஆக, தங்க விசாவுக்கு விண்ணப்பிக்க இருக்கிறார் ராவ்.
எங்கள் வாழ்வின் ஏற்ற தாழ்வுகளை நாங்கள் இணைந்தே பகிர்ந்துகொண்டோம். இப்போது ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. அதையும் என் மனைவியுடனும் பிள்ளைகளுடனும் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்கிறார் ராவ்!