லண்டனில் இருந்து குடும்பத்தினருடன் திரும்பிய தமிழருக்கு கொரோனா உறுதி! தீவிரமாக பரவி வரும் அபாயம்
லண்டனில் இருந்து வந்த தமிழர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவருடைய மாதிரிகள் புனேவில் இருக்கும் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது.
இதனால் இங்கிருந்து தங்கள் சொந்த நாட்டிற்கு வரும் மக்களை, அந்தந்த அரசு கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அதன் படி, பிரித்தானியாவில் இருந்து இந்தியாவிற்கு வந்தவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 வாரங்களில் மட்டும் தேனி மாவட்டத்திற்கு வந்த 21 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தேனி அருகே உள்ள ஸ்ரீரெங்கபுரம் கிராமத்தை சேர்ந்த 36 வயது இன்ஜினியருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கடந்த 20-ஆம் திகதி பிரித்தானியா நாட்டில் இருந்து மனைவி மற்றும் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் கணவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அவர் குடும்பத்தினரை தனிமைபடுத்தி, அவர்களும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட இன்ஜினியருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா? என்பதை அறிய புனே ஆய்வகத்திற்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இவருடன் தொடர்பில் இருந்த அவரின் உறவினர்கள் இருவருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இப்படி ஏற்கனவே ஒரு நாட்டில் கொரோனா பாதிப்பு இருந்தால், அங்கிருந்து சொந்த நாட்டிற்கு திரும்புவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு திரும்புவது, தொடர்ந்து வருவதுடன், தீவிரமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.
