அமெரிக்காவில் மாயமான இந்திய வம்சாவளிக் குடும்பம் தொடர்பில் வெளியாகியுள்ள துயரச் செய்தி
அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியா மாகாணத்தில் மாயமான இந்திய வம்சாவளியினர் நான்குபேர் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள விடயம் அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே கடும் சோகத்தை உருவாக்கியுள்ளது.
மாயமான இந்திய வம்சாவளிக் குடும்பம்
அமெரிக்காவின் நியூயார்க்கில் வாழ்ந்துவந்த இந்திய வம்சாவளிக் குடும்பம் ஒன்றின் உறுப்பினர்களான ஆஷா திவான் (85), கிஷோர் திவான் (89), ஷைலேஷ் திவான் (86) மற்றும் கீதா திவான் (84) ஆகிய நான்குபேரும் மேற்கு விர்ஜினியா மாகாணத்திலுள்ள புண்ணியத்தலம் ஒன்றிற்கு புறப்பட்டுள்ளார்கள்.
ஆனால், ஜூலை 29ஆம் திகதி முதல் அவர்களைக் காணவில்லை. இந்நிலையில், அவர்களைக் குறித்த துயரச் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
ஆம், சனிக்கிழமையன்று அவர்கள் நான்குபேரும் Big Wheeling Creek Road என்னும் சாலையில் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள்.

ட்ரம்ப் பாதுகாப்பிற்கு மீண்டும் அச்சுறுத்தல் - அத்துமீறி நுழைந்த விமானத்தை வெளியேற்றிய போர் விமானங்கள்
சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில், அவர்கள் பயணித்த கார் பள்ளம் ஒன்றில் விபத்துக்குள்ளாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் விபத்தில் பலியான விடயம் அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே கடும் சோகத்தை உருவாக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |