சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர்
சிந்துநதி நீர் நிறுத்தம் காரணமாக இந்திய ரசிகர் ஒருவர் பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பியுள்ளார்.
தண்ணீர் போத்தல்கள் அனுப்பி வைப்பு
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு முடிவுகளை எடுத்தார்.
இந்நிலையில் பாகிஸ்தான் நடிகை ஹனியா அமீருக்கு, இந்திய ரசிகர் ஒருவர் தண்ணீர் போத்தல்களை அனுப்பும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
இந்த போத்தல்களை அவர் கூரியர் மூலம் அனுப்பி வைத்துள்ளார். இந்தியாவிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் ஹனியா அமீருக்கு உள்ளனர். சிந்து நதி நீர் நிறுத்தம் காரணமாக அவர் மீதுள்ள அன்பால் ரசிகர் இதனை அனுப்பியுள்ளார்.
அந்த வீடியோவில் பேசும் நபர், "சிறுவன் கொண்டுவந்த பார்சலில் நடிகை ஹனியா அமீருக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பியுள்ளார்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |