ஒரே நாளில் கோடீஸ்வரனாக மாறிய தமிழன்! வெளிநாட்டு லொட்டரியில் அடித்த ஜாக்பாட்
ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை செய்து தமிழக இளைஞன் வாங்கிய லொட்டரி மூலம் இன்று அவர் கோடீஸ்வரர ஆக மாறியுள்ளார்.
தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தினகர். இவர், தன்னுடைய குடும்ப கடனை அடைப்பதற்காக, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார்.
அதன் பின், அங்கிருக்கும் Fujairah நகரில், தற்போது கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த 25-ஆம் திகதி, ஆன்லைன் மூலம் லொட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார்.
இதையடுத்து புத்தாண்டை தொடர்ந்து நடந்த லொட்டரி குலுக்கலில், அவர் வாங்கிய (1, 33, 40, 45, 46) நம்பர் விழவே, அவருக்கு உள்ளூர் மதிப்பில் 10 மில்லியன் திர்ஹாம்(இலங்கை மதிப்பில் 55,24,68,280 கோடி ரூபாய்) பரிசாக விழுந்துள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், நான் என்னுடைய அறையில் உள்ள நண்பர்கள் இந்த லொட்டரி வாங்குவதை பார்த்திருக்கிறேன்.
அதன் படி நான் வாங்க ஆசைப்பட்டேன், என்னுடைய மறைந்த தாத்தா மற்றும் பாட்டி ஆகியோரின் ஆசீர்வாதம் தான் இதற்கு காரண்ம் என்று நான் நினைக்கிறேன்.
இந்த பணம் மூலம் என் குடும்பத்தை காப்பாற்ற முடியும், இதைத் தவிர, , இந்த பரிசுத் தொகையை வைத்து தனது கிராமத்தில் விவசாய நிலம் வாங்க உள்ளததாகவும் அங்குள்ள பள்ளிக்கு உதவ உள்ளதாகவும் கூறியுள்ளார்.