இந்திய போர் விமானங்களுக்கு உதவியாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட Digital Map
இந்திய போர் விமானங்களுக்கு உதவியாக இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் Digital Map-ஐ தயாரித்து வருகிறது.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) எதிரிகளைத் தவிர்க்கவும், பாதுகாப்பை வலுப்படுத்தவும் டிஜிட்டல் வரைபடங்களைத் தயாரிக்கிறது.
இவை விமான ஓட்டிகளின் தவறான வழிகாட்டுதலைத் தவிர்க்கவும் உதவும் என்று HAL நிறுவனத்தின் Engineering and R&D இயக்குநர் டி.கே.சுனில் தெரிவித்தார்.
ANI
விமானிகள் தங்கள் காக்பிட் காட்சியில் வரைபடத்தை சரிபார்க்கலாம். இது navigationக்கு உதவும். வரைபடம் 2டி மற்றும் 3டி தரத்தில் கிடைக்கும். விமானிகள் மலைப்பாங்கான பகுதியை நெருங்கினால் எச்சரிக்கப்படுவார்கள். அதனால், விபத்து அபாயம் மிகவும் குறையும்.
இதன் மூலம் எதிரி இராணுவ மறைவிடங்கள் மற்றும் ஏனைய பாதுகாப்பு அமைப்புகள் பற்றிய எச்சரிக்கைகள் பெறப்படும் என டி.கே.சுனில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் டிஜிட்டல் வரைபடங்கள் பாதுகாப்புத் துறையின் தன்னிறைவை அதிகரிக்க உதவும். முதற்கட்டமாக இவை போர் விமானங்களில் நிறுவப்படும்.
உலகில் மிகச் சில நாடுகளே இத்தகைய வரைபடங்களைத் தாங்களே தயாரித்துக் கொள்ள முடிந்தது. இவை அனைத்து விமானங்களிலும் நிறுவப்படும். டிஜிட்டல் வரைபடத்தின் அனைத்து வன்பொருள் மற்றும் மென்பொருளும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் என்றும் சுனில் குறிப்பிட்டார்.
எந்த விமானியும் தற்செயலாக கூட எல்லையை கடக்க மாட்டார்கள். விமான ஓட்டிகளுக்கு டிஜிட்டல் வரைபடங்கள் வழங்கப்படுவதால், மேனுவல் மேப் முறை இனி இருக்காது என டி.கே.சுனில் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
India-Made Digital Maps To Help Fighter Jets, Indian Fighter Jets, Hindustan Aeronautics Limited HAL, Digital Map