UPI பரிவர்த்தனைகளுக்கான கட்டண வரம்பு ரூ.5 லட்சமாக உயரத்திய இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி UPI பரிவர்த்தனைகளில் 2 முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.
UPI பரிமாற்ற வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த புதிய வரம்பு மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவதற்கான பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும்.
ரிசர்வ் வங்கியின் (RBI) சமீபத்திய கொள்கை மதிப்பாய்வுக்குப் பிறகு ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இந்த மாற்றத்தை அறிவித்தார்.
கல்வி மற்றும் சுகாதார நோக்கங்களுக்காக அதிக அளவு UPI செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இது உதவும் என்று கூறினார்.
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் (NPCI) அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, வழக்கமான கட்டணங்களுக்கான UPI பரிவர்த்தனை வரம்பு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.1 லட்சம் வரை மட்டுமே.
ஆனால், மூலதனச் சந்தைகள் (capital markets), வசூல் (credit card payments, loan re-payments, EMI), இன்சூரன்ஸ்., போன்ற UPI-ல் சில வகைப் பரிவர்த்தனைகளுக்கு வரம்பு ரூ.2 லட்சம் ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
UPI Limits Hiked, UPI payment limits hiked to Rs 5 lakhs, hospitals and educational institutions