சிங்கப்பூர் ஷாப்பிங் மால் வாசலில் மலம் கழித்த இந்திய தொழிலாளி: விதிக்கப்பட்ட பெரும் அபராதம்
சிங்கப்பூரில் ஷாப்பிங் மாலின் வாசலில் மலம் கழித்த இந்தியருக்கு பெரும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இந்தியரின் மோசமான செயல்
கடந்த ஆண்டு சிங்கப்பூரின் மெரினா பே சாண்ட்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஷாப்பிங் மாலின் நுழைவு வாயிலில் 37 வயது இந்திய கட்டிட தொழிலாளி மலம் கழித்த குற்றத்திற்காக சுமார் S$400 (தோராயமாக ₹25,000) அபராதம் விதிக்கபட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பொது சுகாதாரத்தின் கீழ் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையில் ராமு சின்னராசா(Ramu Chinnarasa) என்ற நபர் தன் மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
2023ம் ஆண்டு அக்டோபர் 30 திகதி நடைபெற்ற இந்த சம்பவத்தின் போது, சின்னராசா மிகுந்த மதுபோதையில் இருந்ததுடன் கசினோவில்(casino) சூதாட்டம் விளையாடி விட்டு காலை 7 மணியளவில் ஷாப்பிங் மாலின் வாசலில் மலம் கழித்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக ஊடகத்தில் பரவிய பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
சின்னராசா கைது
இந்நிலையில் ஜூன் மாதம் கசினோவுக்குள் சின்னராசா மீண்டும் நுழைய முயற்சித்த போது பொலிஸார் அவரை கைது செய்தனர்.
இதையடுத்து, அவர் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது நீதிபதியிடம் குறைந்தபட்ச அபராதத்தை கோரினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |