விண்வெளியில் பறந்த இந்திய தேசிய கொடி...பிரமிப்பை ஏற்படுத்திய ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா
- பூமியில் இருந்து 30 கிமீ தொலைவில் பறக்கவிடப்பட்ட இந்திய தேசிய கொடி
- இந்தியாவின் 75வது சுகந்திர தினத்தை முன்னிட்டு ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு புதிய முயற்சி
இந்தியாவின் 75வது சுகந்திர தினத்தை தொடர்ந்து, பூமியில் இருந்து 30 கிலோ மீட்டர் உயரத்தில் இந்திய தேசியக் கொடியை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு பறக்கவிட்டுள்ளது.
இந்தியா தனது 75வது சுகந்திர தினத்தை இன்று கொண்டாடி வருகிறது, அதனைப் போற்றும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்கள் அனைவரையும் அவர்களது இல்லத்திலும், சமூக ஊடகப் பக்கத்திலும் இந்திய தேசிய மூவர்ண கொடியை ஏற்றுமாறு கேட்டுக் கொண்டார்.
அதனடிப்படையில் இந்திய பிரபலங்கள் பலரும் தங்களது சமூக ஊடகப் பக்கங்களின் சுயவிவர புகைப்படத்தில் இந்திய தேசிய கொடியை வைத்தனர், மேலும் பலர் தங்களது தேசப் பற்றை வெளிப்படுத்தும் நோக்கில் இந்தியாவின் மூவர்ண தேசிய கொடியை தங்களது வீட்டில் பறக்கவிட்டனர்.
இந்தநிலையில் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு பூமியில் இருந்து 1,06,000 அடி உயரத்தில் இந்திய தேசிய கொடியை பறக்கவிட்டுள்ளது.
Celebrating 75 Years of Independence by unfurling the Indian Flag @ 30 km in Near Space.@PMOIndia @narendramodi @DrJitendraSingh@isro @INSPACeIND@mygovindia#AzadiKaAmritMahotsov#HarGharTiranga pic.twitter.com/4ZIJMdSZE6
— Space Kidz India (@SpaceKidzIndia) August 14, 2022
சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் இந்தியா முழுவதிலும் இருந்து 750 பெண் மாணவர்களால் AzadiSAT உருவாக்கப்பட்டு சுகந்திர தேசிய கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு வரலாற்று 75 வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட ஹர் கர் திரங்கா பிரச்சாரத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Space Kidz India
கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானிய சாலையில் அதிகாலை நடந்த துப்பாக்கி சூடு: பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள்
ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நாட்டிற்கு இளம் விஞ்ஞானிகளை உருவாக்கி, எல்லையற்ற உலகத்திற்கான விழிப்புணர்வை குழந்தைகளிடையே பரப்பும் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.