பிரித்தானிய சாலையில் அதிகாலை நடந்த துப்பாக்கி சூடு: பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள்
- பிரித்தானியாவின் மான்செஸ்டரில் நடைபெற்ற சந்தேகத்திற்கிடமான துப்பாக்கிச் சூடு
- 18 முதல் 25 வயது மதிக்கதக்க நபர் பரிதாபமாக உயிரிழப்பு
பிரித்தானியாவின் மான்செஸ்டரில் திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்ற சந்தேகத்திற்கிடமான துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மான்செஸ்டரின் மோஸ் சைடில்(Moss Side) உள்ள கிளேர்மாண்ட் சாலையில் திங்கள்கிழமை அதிகாலை சந்தேகதிற்கிடமான வகையில் துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 18 முதல் 25 வயது மதிக்கதக்க ஒருவரை பலத்த காயங்களுடன் பொலிஸார் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் சிறிது நேரத்தில் துப்பாக்கி சூடு காயம்பட்ட நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Sky News
இதனைத் தொடர்ந்து பிரின்சஸ் பார்க்வே மற்றும் க்ளேர்மாண்ட் ரோடு ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள் செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்காணிப்பாளர் ஜூட் ஹோம்ஸ் தெரிவித்த தகவலில், இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எங்களது அதிகாரிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் எனத் தெரிவித்தார்.
மேலும் முழு சூழ்நிலையையும் புரிந்து கொள்ள நாங்கள் மிகவும் கடினமாக உழைத்து வருகிறோம். எங்களுக்கு உதவக்கூடிய எந்தவொரு விவரம் தெரிந்தால் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கூடுதல் செய்திகளுக்கு: விரோத இராணுவ படைகளுக்கு எதிராக...கைகோர்க்கும் ரஷ்யா மற்றும் வட கொரியா
ஏனெனில் இந்த தீவிரமான சம்பவத்திற்கு பல சாட்சிகள் உள்ளனர் என்பது எங்களுக்குத் தெரியும் எனவும் ஜூட் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார்.