விரோத இராணுவ படைகளுக்கு எதிராக...கைகோர்க்கும் ரஷ்யா மற்றும் வட கொரியா
- இருநாட்டு உறவை வலுப்படுத்த ரஷ்ய மற்றும் வட கொரிய தலைவர்கள் சம்மதம்.
- விரோத இராணுவ படைகளுக்கு எதிரான நெருக்கமான உறவை உருவாக்குவது தொடர்பான கடிதங்கள் பரிமாற்றம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இருவரும் விரோத இராணுவ படைகளுக்கு எதிரான நெருக்கமான உறவை உருவாக்குவது தொடர்பான கடிதங்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.
ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் நடவடிக்கை தொடங்கியதில் இருந்து ரஷ்யா மேற்கத்திய விரோத நாடுகளுக்கு எதிரான புதிய நட்புறவை உருவாக்குவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
Sky News
இந்தநிலையில் வட கொரியாவின் சுகந்திர தினத்தன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நட்புறவை வலுபடுத்துவது தொடர்பான கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில் விரிவான மற்றும் ஆக்கபூர்வமான இருதரப்பு உறவுகளை பொதுவான முயற்சிகளுடன் விரிவுப்படுத்த இந்த ஜோடி வேலை செய்ய வேண்டும் என பரிந்துரைத்துள்ளார்.
மேலும் கொரிய தீபகற்பம் மற்றும் வடகிழக்கு ஆசிய பிராந்தியத்தின் பாதுகாப்பில் ஸ்திரத்தன்மை வலுப்படுத்த இந்த நட்புறவு உதவும் என தனது கடிதத்தில் புடின் தெரிவித்துள்ளார்.
Sky News
கூடுதல் செய்திகளுக்கு: என் மகன் இறந்து விடுவான்... அதிகரித்து வரும் வாழ்க்கை செலவு நெருக்கடி: பிரித்தானிய தாயின் கவலை
இதனைத் தொடர்ந்து வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் எழுதிய கடிதத்தில், ஜப்பானுக்கு எதிரான வெற்றியுடன் இரண்டாம் உலகப் போரில் ரஷ்ய-வட கொரிய நட்பு உருவாகியதால், இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய மற்றும் தந்திரோபாய ஒத்துழைப்பு, ஆதரவு மற்றும் ஒற்றுமை ஒரு புதிய நிலையை எட்டியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.