என் மகன் இறந்து விடுவான்... அதிகரித்து வரும் வாழ்க்கை செலவு நெருக்கடி: பிரித்தானிய தாயின் கவலை
- அதிகரித்து வரும் வாழ்க்கை செலவு நெருக்கடியால் தனது மகன் ஐசக் இறந்து விடுவான்.
- பிரித்தானிய அரசு தெளிவான மற்றும் துல்லியமான விவரங்களை கோடிட்டுக் காட்ட வேண்டும்
பிரித்தானியாவில் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவு நெருக்கடியால் தனது மகன் ஐசக் இறந்து விடுவான் என அவரது தாய் மேக்சின் ரோத்செஸ்டர் கவலைக் கொண்டுள்ளார்.
பிரித்தானியாவில் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவு நெருக்கடி மற்றும் உயரந்து வரும் ஆற்றல் எரிசக்தியின் விலைகள் போன்றவற்றால் மில்லியன் கணக்கான மக்கள் கடும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
மேக்சின் ரோத்செஸ்டர் (Maxine Rothchester) ஸ்கை நியூஸ் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், அதிகரித்து வரும் ஆற்றல் எரிசக்தியின் விலையேற்றத்தால் தனது மகன் ஐசக் உயிரிழந்து விடுவான் என கவலை தெரிவித்துள்ளார்.
ஐசக் எட்டு மாத குழந்தையாக இருந்ததிலிருந்து மேக்சின் அவனை கவனித்து வருகிறார், ஐசக்கிற்கு தற்போது ஒன்பது வயதாகிறது ஆனால் ஐசக்கின் உடல்நிலை என்பது புதிதாகப் பிறந்த குழந்தையின் மன வயது மற்றும் உடல் எடை 11 கிலோ மட்டுமே கொண்டது.
பிறந்தது முதல் ஐசக் ஆலன்-ஹெர்ன்டன்-டட்லி நோய்க்குறியால் அவதிப்படுகிறான், இது மிகவும் அரிதான ஒரு நிலை, அதாவது அவரை உயிருடன் வைத்திருக்க அவருக்கு 24/7 கவனிப்பும் சிறப்பு உபகரணங்களும் தேவை.
இந்த உபகரணங்கள் தேவைப்படும் குழந்தைகளைக் கொண்ட பல பெற்றோர்களைப் போலவே நானும் தற்போது அதிகரித்து வரும் ஆற்றல் விலை உயர்வால் பயப்படுகிறேன் என மேக்சின் ஸ்கை நியூஸிடம் தெரிவித்தார்.
எங்களுக்குத் தேவையான உபகரணங்கள் ஒரு தேர்வு அல்ல, அது ஐசக்கின் வாழ்க்கை, ஐசக்கிற்கு 24/7 என்ற கணக்கில் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. அவனது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் மின்சாரத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.
இந்தநிலையில் எங்களது வாராந்திர மின்கட்டணம் ஏற்கனவே அதிகரித்து வருகிறது, தற்போது வாரத்திற்கு சுமார் 30 பவுண்டுகள் அதிகமாக செலவிழிக்கிறோம், அவை மீண்டும் உயர்ந்தால் அவற்றை எப்படி சமாளிக்கப் போகிறோம் என தெரியவில்லை.
ஏனெனில் வரும் பணம் அப்படியே உள்ளது, ஆனால் செலவு மற்றும் கட்டணங்களுக்காக வெளியேறும் பணம் அதிகரித்து கொண்டே செல்லுகிறது என்று மேக்சின் தெரிவித்தார்.
இதனால் அதிகரித்து வரும் பில்களை செலுத்த சிரமப்படுபவர்களுக்கு என்ன கூடுதல் உதவி வழங்கப்படும் என்பது பற்றிய தெளிவான மற்றும் துல்லியமான விவரங்களை அரசாங்கம் கோடிட்டுக் காட்ட வேண்டும் என்று மேக்சின் தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: பரபரப்பான லண்டன் தெரு ஒன்றில் இயந்திரத் துப்பாக்கிகளுடன் திடீரென நுழைந்த பொலிசார்: ஹெலிகொப்டரும் வட்டமிட்டதால் அதிர்ச்சி
மேலும் அடுத்த பெரிய விலையேற்றத்திற்கு முன்னதாக விரிவான திட்டத்தை அரசு வைத்திருப்பது மிகவும் நல்ல விஷயமாக இருக்கும் என்றும், அவை எங்களை போன்ற குடும்பங்களை கவலை கொள்வதில் இருந்து நிறுத்தும் என மேக்சின் தெரிவித்தார்.