கோப்பை வென்ற இந்திய கால்பந்து அணிக்கு மறுப்பால் கொந்தளித்த ரசிகர்கள்! பிரதமர் மோடிக்கு பயிற்சியாளர் உணர்ச்சிகர கடிதம்
இந்திய கால்பந்து அணி ஆசிய விளையாட்டில் பங்கேற்க முடியாது என தேசிய விளையாட்டு அமைச்சகம் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணிக்கு மறுப்பு
ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இந்திய கால்பந்து அணி, பங்கேற்கும் அணிகளில் 8 இடங்களுக்குள் வர வேண்டும். இல்லையென்றால் பங்கேற்க அனுமதி அளிக்கப்படாது என இந்திய விளையாட்டு அமைச்சகம் கூறியது.
ஆனால் இந்திய அணி 18வது இடத்தில் இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தெற்காசிய கால்பந்து பெடரேஷன் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
PTI
பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்த பயிற்சியாளர்
இந்த நிலையில், ஆடவர் கால்பந்து தேசிய அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோருக்கு, இந்திய அணியை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்குமாறு உணர்ச்சிப்பூர்வமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அனைத்து இந்திய கால்பந்து பெடரேஷனின் பொதுச் செயலாளர் ஷாஜி பிரபாகரன் இதுகுறித்து கூறுகையில், 'இது அரசு எடுத்த முடிவு. எனவே, நாங்கள் அதை கடைபிடிக்க வேண்டும். இருப்பினும், கால்பந்தைப் பொறுத்தவரை முடிவை மறுபரிசீலனை செய்ய அரசுக்கு வேண்டுகோள் விடுப்போம்' என தெரிவித்துள்ளார்.
MURALI KUMAR K
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |