ஜேர்மனியில் 9 ஆண்டுகள் வாழ்ந்தும் இந்திய குடியுரிமையை மாற்ற மறுத்த இந்திய நிறுவனர்
இந்திய நிறுவனர் ஒருவர், ஜேர்மனியில் 9 ஆண்டுகள் வாழ்ந்தும் இந்திய குடியுரிமையை விட்டுத்தர மறுத்துள்ளார்.
ஜேர்மனியில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக வாழ்ந்து வரும் இந்திய தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சியாளர் மயூக் பஞ்சா, தன்னிடம் ஜேர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தகுதி இருந்தபோதும், அதை ஏற்க மறுத்துள்ளார்.
மயூக் பஞ்சா, முதலில் ஜேர்மனிக்கு முனைவர் பட்ட ஆராய்ச்சியாளராக சென்றார். பின்னர், Populations என்ற AI நிறுவனத்தை நிறுவினார்.

அவர் கூறியதாவது:
“ஒரு பாஸ்போர்ட் என்பது சாதாரண ஆவணம் மட்டுமல்ல, அது அடையாளம். என் அடையாளம் இந்தியன்.”
“ஜேர்மனியின் வரலாறு, மொழி, கலாச்சாரம் அனைத்தையும் புரிந்துகொண்டாலும், அதனுடன் ஆழமான தொடர்பு இல்லை.”
“பெர்லினின் சர்வதேச சூழலில் வசதியாக இருந்தாலும், ஜேர்மனியின் பிற பகுதிகளில் முழுமையாக வீட்டில் இருப்பது போன்ற உணர்வு இல்லை.” என அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: “ஜேர்மனி கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றாலும் எனக்கு பெரிதாக தாக்கம் இல்லை. ஆனால் இந்தியா உலகக் கோப்பையை வென்றால் நான் மிகுந்த உற்சாகம் அடைகிறேன்.”
I have been here 9 + years and I became eligible for the German passport a year back. I could have applied for citizenship a year ago, but I did not. I have thought about this a lot and I am increasingly coming to the conclusion that I can’t do this. Because I don’t feel German.… https://t.co/amUbrxgObK
— Mayukh (@mayukh_panja) December 5, 2025
சமூக கருத்துக்கள்
இந்த முடிவை சமூக ஊடகங்களில் பலர் பாராட்டியுள்ளனர்.
“நீங்கள் நல்ல மனிதர்” என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
“ஜேர்மன் பாஸ்போர்ட் இருந்தால் பயணம் எளிதாக இருக்கும்” என்று மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.
“இது மிகவும் தனிப்பட்ட முடிவு. அதை பொதுவாக பகிர்ந்தது துணிச்சலான செயல்” என்று மற்றோரு நபர் பாராட்டியுள்ளார்.
மயூக் பஞ்சா, “இந்திய பாஸ்போர்ட் என் வேர் மற்றும் அடையாளத்தை குறிக்கிறது. இது சட்ட ரீதியான நன்மைக்காக அல்ல, என் உண்மையான அடையாளத்துடன் இணைந்திருப்பதற்காக” என்று கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Indian man refuses German passport, Indian founder in Germany citizenship news, Mayukh Panja Indian entrepreneur Germany, Indian passport vs German passport, Indian identity abroad citizenship choice, Germany citizenship refusal Indian story, Indian diaspora Germany news, Indian researcher Berlin citizenship issue, Indian abroad keeps Indian passport, Indian founder German citizenship