Most Wanted குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இந்தியர்: அமெரிக்காவின் FBI அமைப்பு அதிரடி
Indian gangster major Singh on FBI’s most wanted person: அமெரிக்காவின் FBI அமைப்பின் தேடப்படும் மிக முக்கிய குற்றவாளிகள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த மேஜர் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.
தேடப்படும் மிக முக்கிய குற்றவாளியான இந்தியர்
அமெரிக்காவின் முக்கியமான FBI அமைப்பின் தேடப்படும் மிக முக்கிய குற்றவாளிகள் பட்டியலில் இந்தியாவின் பஞ்சாப்பை சேர்ந்த 29 வயது மேஜர் சிங்(Major Singh) அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இவர் பஞ்சாப்பின் ஜக்கு பகவான்பரியா(Jaggu Bhagwanpuria) என்ற குற்றக் கும்பலுடன் தொடர்புடையவர் என கூறப்படுகிறது.
மேலும் கலிபோர்னியாவில் நடைபெற்ற பன்னாட்டுக் குற்றச் சம்பவத்தில் மேஜர் சிங்கிற்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் இவரை அமெரிக்க அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கலிபோர்னியாவின் மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் மேஜர் சிங் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச அளவிலான கைது நடவடிக்கை
அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சட்ட அமலாக்க முகமைகள் இணைந்து நடத்தும் ஆபரேஷன் ஹார்ட்பால்(Operation Hardball) என்ற நடவடிக்கையின் கீழ் மேஜர் சிங் தீவிரமாக தேடப்பட்டு வருகிறார்.
ஆபரேஷன் ஹார்ட்பால் நடவடிக்கையின் கீழ் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சோதனையில் பன்னாட்டு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய இந்தியர்கள் 24 பேர் இந்த மாதத்தின் தொடக்கத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதில் 11 பேர் கலிபோர்னியாவில் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |