அமெரிக்காவுக்கு கல்வி கற்கச் சென்ற இந்திய இளம்பெண்: பரிதாபகரமான நிலையில் சாலையோரமாக கண்டுபிடிப்பு
அமெரிக்காவுக்கு உயர் கல்வி கற்கச் சென்ற ஒரு இந்திய இளம்பெண், சாலையோரம் பட்டினியால் வாடிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாலையோரம் பட்டினியால் வாடிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இளம்பெண்
அமெரிக்க நகரமான சிகாகோவில், சாலையோரமாக பட்டினியால் வாடிய நிலையில் இந்திய இளம்பெண் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
Syeda Lulu Minhaj Zaidi என்ற அந்த பெண், இந்தியாவின் ஹைதராபாதைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. உயர் கல்வி கற்பதற்காக மிச்சிகன் மாகாணத்திலுள்ள டெட்ராயிட் நகருக்குச் சென்ற அவர், தற்போது, இல்லினாயிஸ் மாகாணத்திலுள்ள சிகாகோ நகரில், சாலையோரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
பசியால் வாடிய நிலையில், மன அழுத்தத்துக்குள்ளாகியிருந்த Syedaவுக்கு ஒருவர் உணவும் தண்ணீரும் கொடுக்கும் காட்சிகள் சமூக ஊடகம் ஒன்றில் பகிரப்பட்டுள்ளன.
Syeda Lulu Minhaj Zaidi, a resident of Hyderabad, went to pursue her masters in information science at TRINE University in US. Two months ago, her family lost touch with her. Someone told her family that she fell in deep depression and was spotted at Chicago roads. pic.twitter.com/rKKCST1ALY
— Waquar Hasan (@WaqarHasan1231) July 26, 2023
தன் பெயர் கூட சரியாக நினைவில் வராத அளவுக்கு பரிதாபமான நிலையில் கண்டுபிடிகக்ப்பட்டுள்ளார் Syeda.
தாயார் கோரிக்கை
இந்நிலையில், Syedaவின் தாயான Syeda Wahaj Fatima, தன் மகளை இந்தியாவுக்குக் கொண்டுவர உதவுமாறு இந்திய தூதரகத்தைக் கோரியுள்ளார்.
தன் மகளுடைய உடைமைகள் திருட்டுப் போய்விட்டதாகவும், மன அழுத்ததால் பாதிக்கப்பட்ட நிலையில், பட்டினியால் வாடிய நிலையில், தன் மகளை ஹைதராபாதைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் கண்டுபிடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Omg I’m shocked to see her condition, they lived as our neighbours for many yrs. I know her from my childhood, she was an incredibly studios child. Please help her return to hyderabad back to her family. ??? https://t.co/UXX689A7fa
— Fahad Maqsusi (@FahadMaqsusi) July 25, 2023
டெட்ராயிட்டுக்குச் சென்ற Syeda, எதனால், எப்படி சிகாகோ வந்தார் என்பது தெரியவில்லை. இரண்டு நகரங்களுக்கும் இடையிலான தூரம் சுமார் 560 கிலோமீற்றர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |