அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் இந்திய இளம்பெண் பலி
அமெரிக்காவின் டெக்சாஸில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூடு
அமெரிக்காவின் டெக்சாஸிலுள்ள மால் ஒன்றில், கடந்த சனிக்கிழமை, Mauricio Garcia என்னும் நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
அதில், எட்டு பேர் கொல்லப்பட்டார்கள், துப்பாக்கிச்சூடு நடத்தியவரை பொலிசார் சுட்டுக்கொன்றார்கள்.

Source: The Sun
தெலுங்கானா நீதிபதியின் மகள்
கொல்லப்பட்டவர்களில், இந்தியாவின் தெலுங்கானாவைச் சேர்ந்த ஐஷ்வர்யா ரெட்டி (Thatikonda Aishwarya Reddy, 27) என்னும் இளம்பெண்ணும் ஒருவர்.
ஐஷ்வர்யா, தெலுங்கானாவில் மாவட்ட மற்றும் செஷனஸ் நீதிபதியாக பணியாற்றிவரும் T Narsi Reddy என்பவரின் மகளாவார்.

Source: The Sun
அமெரிக்காவில் வாழ்ந்துவரும் ஐஷ்வர்யா, நண்பர் ஒருவருடன் மாலுக்குச் செல்வதாக தன் தாய் அருணாவிடம் கூறிவிட்டு சென்ற நிலையில், துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார்.
ஐஷ்வர்யா கொல்லப்பட்ட செய்தி கேட்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், அவரது உடலை இந்தியாவுக்குக் கொண்டு வரும் முயற்சிகள் துவக்கப்பட்டுள்ளன.
