ரூ.62,000 கோடி மதிப்பில் 97 LCA மார்க் 1A போர் விமானங்களை வாங்க இந்திய அரசு ஒப்புதல்
ரூ.62,000 கோடி மதிப்பில் இந்திய விமானப்படைக்கு 97 உள்நாட்டு LCA தேஜாஸ் மார்க் 1A போர் விமானங்களை வாங்க இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
LCA Mark 1A fighter jets
இந்திய விமான படைக்கு வலுசேர்க்கும் வகையில் அரசு பல முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரூ.62,000 கோடி மதிப்பில் உள்நாட்டு LCA தேஜாஸ் மார்க் 1A போர் விமானங்களை வாங்க இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்புத் திட்டமான ‘Make in India’ திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் விதமாக இந்திய விமானப்படைக்கு (IAF) 97 LCA மார்க் 1A போர் விமானங்களை வாங்குவதற்கான திட்டத்திற்கு அரசு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த விமானங்களை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (Hindustan Aeronautics Limited ) தயாரிப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசு ஏற்கனவே 83 விமானங்களுக்கு சுமார் ரூ.48,000 கோடிக்கு ஓர்டர்களை வழங்கியிருப்பதால், இது LCA மார்க் 1A போர் விமானங்களுக்கான இரண்டாவது ஓர்டராக இருக்கும்.
இந்த திட்டம், இந்திய விமானப்படை தனது மிக்-21 விமானங்களுக்கு மாற்றாக இருக்கும். இந்த உள்நாட்டு போர் விமானத் திட்டத்தை பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் விமானப்படை தலைமையகம் முழுமையாக ஆதரிக்கிறது.
இதனால், உள்நாட்டுமயமாக்கலை ஊக்குவிப்பதற்கும், பாதுகாப்பு வணிகத்தில் ஈடுபட்டுள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பெரிய வணிகத்தை வழங்குவதற்கும் ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும்.
விமானப்படைக்கு வழங்கப்பட்ட ஆரம்ப 40 LCA-க்களை விட LCA மார்க் 1A விமானம் மேம்பட்ட ஏவியோனிக்ஸ் மற்றும் ரேடார்களைக் கொண்டுள்ளது.
புதிய LCA Mark1A விமானங்களில் 65%க்கும் அதிகமான பாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன.
இந்தத் திட்டம் நாட்டின் ஆத்மநிர்பர் பாரத் மற்றும் மேக் இன் இந்தியா முயற்சிகளின் முன்னோடியாக இருந்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |