இந்தியாவில் இந்த 3 இடங்களுக்கு மட்டும் போக முடியாது! கடுமையான தடை எதற்கு தெரியுமா?
இந்தியாவின் முக்கியமான மூன்று இடங்களை பார்வையாளர்கள் பார்க்க தடை உள்ளது.
பன்முக கலாச்சாரங்களை உள்ளடக்கிய நாடான இந்தியாவில் வியக்க வைக்கும் பல்வேறு இடங்கள் உள்ளன.
இந்தியாவிற்கு சுற்றுலாவுக்கு வரும் பயணிகளுக்கு மலைகள், பாலைவனம், கடற்கரைகள் என பல பகுதிகளை சுற்றிப் பார்க்க அனுமதி உண்டு.
ஆனால், குறிப்பிட்ட மூன்று பகுதிகளுக்கு மட்டும் பார்வையாளர்கள் செல்ல தடை உள்ளது. அந்த இடங்கள் குறித்து பார்ப்போம்.
பாபா அணு ஆராய்ச்சி மையம்
BARC எனும் பாபா அணு ஆராய்ச்சி மையம், மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளது. இது பிரதமரின் நேரடி கண்காணிப்பில் உள்ள முதன்மையான அணு ஆராய்ச்சி மையம் ஆகும்.
இங்கு பல்வேறு அணு ஆலைகள் அமைக்கப்பட்டு ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும்.
ஏனெனில் இங்கு அணுக்கரு எரிபொருள் சுழற்சி, எதிர்காலத்திற்கு தேவையான நவீன அணுக்கரு ஆற்றல் அமைப்புகள், தொழிற்சாலைகளுக்குத் தேவையான மின்னாற்றல் என பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனவே, ஆராய்ச்சி மாணவர்கள் தவிர ஏனைய பார்வையாளர்களுக்கு இங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாங்கோங் சோ ஏரி (Pangong Tso)
ஜம்மு - காஷ்மீரின் லடாக்கில் லே பகுதியில் இருந்து சீன எல்லை வரை மிகப்பெரும் பரப்பளவில் இந்த ஏரி அமைந்துள்ளது.
என்னதான் இந்த இடம் பார்ப்பதற்கு ரம்யமாக இருந்தாலும், சீன எல்லைக்கு அருகில் இதன் சில பகுதிகள் இருப்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் பணபலம், அதிகாரம் என எதுவும் இங்கு செல்ல பயன்படாது என்று கூறப்படுகிறது.
வடக்கு சென்டினல் தீவு (North Sentinel Island)
அந்தமான் நிகோபர் தீவு இந்தியாவின் யூனியன் பிரதேசமாக உள்ளது. இதன் 60 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் வடக்கு சென்டினல் தீவு அமைந்துள்ளது.
இங்கு 'சென்டினலீஸின்' என அழைக்கப்படும் உள்ளூர் பழங்குடியின மக்களுக்கு வெளியுலகத் தொடர்புகள் சுத்தமாக இல்லை.
தனித்தன்மையுடன் வாழ்ந்து வருகிற இவர்கள் டிவி, செல்போன், மின்சாரம் எதுவும் இல்லாமல் வாழ்கிறார்கள்.
இங்கு செல்ல ஏன் இந்திய அரசு தடைவிதித்துள்ளது என்றால், பழங்குடியின மக்களின் பாதுகாப்பு மற்றும் நோய்த்தொற்று ஏற்படுவதை தடுப்பதற்காக என கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |