துபாயில் கோடீஸ்வரரான இந்தியர்! ஓட்டலில் வேலை பார்த்தவருக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்
சஜேஷ் நான்கு ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் பிக் டிக்கெட்டுகளை வாங்குகிறார்.
வெற்றிபெற்ற பரிசு தொகையிலிருந்து, தன்னுடன் வேலை பார்க்கும் நண்பர்களுக்கு பகிர்ந்து கொடுக்கவுள்ளதாக கூறினார்.
துபாயில் உணவக ஊழியராக வேலை செய்துவரும் இந்தியர் ஒருவர் லொட்டரியில் ரூ. 55 கோடி பரிசை வென்றுள்ளார்.
வியாழன் அன்று பிக் டிக்கெட் லைவ் டிராவில் 25 மில்லியன் திர்ஹம் (ரூ. 55 கோடி) வென்ற சஜேஷ் என்எஸ் (Sajesh NS) எனும் இந்தியர் Series 245-ன் பெரும் பரிசு வென்றவராக அறிவிக்கப்பட்டார்.
சஜேஷ் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஓமானில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் சென்றார். கடந்த, நான்கு ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் பிக் டிக்கெட்டுகளை வாங்குகிறார்.
அவரது வெற்றிக்கான டிக்கெட்டை ஆன்லைனில் வாங்க அவருக்கு 20 சக பணியாளர்கள் உதவினார்கள். இதனால், அவர்கள் அனைவருக்கும் அவர் தனது பரிசுத் தொகையைப் பகிர்ந்து கொடுக்க உள்ளார்.
சஜேஷ் வெற்றிபெற்ற பணத்தை எவ்வாறு பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது மற்றவர்களுக்கு உதவ விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
"நான் பணிபுரியும் ஹோட்டலில் 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர், மேலும் எனது வெற்றிகளின் ஒரு பகுதியை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் அவர்களில் பலருக்கு என்னால் முடிந்தவரை உதவ விரும்புகிறேன்" என்று அவர் கூறினார்.
இப்போது கோடீஸ்வரரானாலும், ஒவ்வொரு மாதமும் லொட்டரி டிக்கெட் வாங்குவதைத் தொடர சஜேஷ் திட்டமிட்டுள்ளார்.