மாஸ்க் அணிய சொல்லிய நபரை கன்னத்தில் கொடூரமாக தாக்கிய இந்தியருக்கு நேர்ந்த கதி! வெளியான அதிரடி தீர்ப்பு
சிங்கப்பூரில் சரியாக முகக்கவசம் அணிய சொல்லிய நபரை தாக்கிய இந்தியருக்கு 7 வாரம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் இன்று வரை ஒழிந்தபாடில்லை. இந்நிலையில் பல நாடுகளில் கொரோனவை தடுக்கும் விதமாக முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒரு சில நாடுகளில் கொரோனா தாக்கம் குறைந்ததையடுத்து முகக்கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சிங்கப்பூர் நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கடும் கட்டுப்பாடுகள் உள்ளது.
இந்நிலையில் இந்தயாவை பூர்விகமாக கொண்ட சந்திர சேகர் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவர் பொது இடத்தில் மாஸ்க்கை சரியாக அணியவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் சிங்கப்பூரை சேர்ந்த ஒருவர் சந்திர சேகரை மாஸ்க்கை சரியாக அணியும்படி வலியுறுத்தியுள்ளார். ஆனால் அவர் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். இதையடுத்து மீண்டும் அந்த நபர் மாஸ்க்கை சரிசெய்ய சொன்னதால் கோபத்தில் அந்த நபரை கன்னத்தில் கடுமையாக தாக்கியுள்ளார்.
இது தொடர்பாக இந்திய நபர் மீது புகாரளிக்கப்ட்ட நிலையில் சந்திர சேகர் மேல் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஏழு வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.