ரூ.8.29 லட்சம் கோடி நன்கொடை - உலகின் மிகப்பெரிய நன்கொடையாளரான இந்தியர்
உலக பணக்காரர்கள் பட்டியலில் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், உலகில் அதிக நன்கொடை வழங்கியவர்கள் பட்டியலில் இந்தியர் ஒருவர் முதலிடத்தில் உள்ளார்.
ஜாம்செட்ஜி டாடா
டாடா நிறுவனத்தின் நிறுவனரான ஜாம்செட்ஜி நுசர்வாஞ்சி டாடா, ரூ.8,29,734 கோடி நன்கொடைகள் வழங்கி, உலகளவில் முதலிடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
1839 ஆம் ஆண்டு குஜராத்தில் ஜொராஸ்டிரியன் பார்ஸி குடும்பத்தில் பிறந்த ஜாம்செட்ஜி நுசர்வாஞ்சி டாடா, தனது குடும்பத்தை பாரம்பரியத்தை உடைத்து தொழில் துறையில் கால்பதித்தார்.
1868 ஆம் ஆண்டில், ரூ.21,000 முதலீட்டில் திவாலான எண்ணெய் ஆலையை வாங்கி பருத்தி ஆலையாக மாற்றினார்.
அதன் பின்னர் அவர் தொடங்கிய டாடா நிறுவனம், இன்று ரூ.26.31 லட்சம் கோடி சொத்துமதிப்புடன் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் வளர்ந்துள்ளது.
ரூ.8,29,734 கோடி நன்கொடை
ஜாம்செட்ஜி டாடா தனது வாழ்நாளில் ரூ.8,29,734 கோடி நன்கொடைகளை கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக வழங்கியுள்ளார்.
1904 ஆம் ஆண்டு அவரது மறைவிற்கு பின்னர், தற்போது வரை டாடா நிறுவனம் கல்வி, சுகாதாரத்திற்காக மேம்படுத்த பல கோடிகளை நன்கொடையாக வழங்கி வருகிறது.
இந்த பட்டியலில், ஜாம்செட்ஜி டாடாவிற்கு அடுத்தபடியாக பில்கேட்ஸ் 2ஆம் இடம் பிடித்துள்ளார்.
ஜாம்செட்ஜி டாடாவை தவிர்த்து, பட்டியலில் இடம் பெற்ற மற்றொரு இந்தியராக விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |