ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீராங்கனைக்கு அநீதி? முதலில் வெண்கலம் பின் வெள்ளி..சர்ச்சை வீடியோ
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய தடை ஓட்டப்பந்தய வீராங்கனை ஜோதி யர்ராஜி சர்ச்சைக்குபின் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
தடை ஓட்டம்
பெண்களுக்கான 100 மீற்றர் தடை ஓட்டப்பந்தயம் (Hurdling race) நேற்று நடந்தது. போட்டியை தொடங்க துப்பாக்கி சுடும் முன், சீன வீராங்கனை வூ யன்னி ஓட ஆரம்பித்தார்.
அவரைத் தொடர்ந்து இந்திய வீராங்கனை ஜோதி யர்ராஜி தடைகளை விட்டு வெளியேறினார். உடனே அதிகாரிகளால் போட்டி நிறுத்தப்பட்டது.
ஜோதி தவறான தொடக்கத்தால் வெளியேறுவார் என்று கூறப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தார். அவர், தவறான தொடக்கத்தை ஏற்படுத்தியவர் வூ தான் என வாதிட்டார். இரு வீராங்கனைகளை அழைக்கப்பட்டனர்.
It's a shame that such injustice is being doing to an indian athlete at an international event like the Asian games 2023! The Shameless Chinese home favouriteism clearly showcased.
— Alisha abdullah (@alishaabdullah) October 1, 2023
What a mental trauma & distractio it would have caused Jyothi yarraji.. #AsianGames… pic.twitter.com/BPgr2hY7dv
தவறிழைத்த சீன வீராங்கனை
Trackside திரையில் ரீப்ளே செய்து பார்த்தபோது வூ முதலில் தடையில் இருந்து வெளியேறியது தெளிவாக தெரிந்தது. இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
PTI
நீண்ட விவாதத்திற்கு பிறகு ஜோதி, வூ இருவருமே மீண்டும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். இதில் ஜோதி மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலம் வென்றார்.
இதற்கிடையில், இந்திய தடகள கூட்டமைப்பு வூவை தகுதி நீக்கம் செய்யக்கோரி கண்டனத்தை பதிவு செய்தது. பின்னர், வூ பந்தயத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
தொழில்நுட்ப விதி 16.8யின் கீழ் வூ தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், ஜோதியின் வெண்கலம் பின் வெள்ளியாக மேம்படுத்தப்பட்டது.
AP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |