லண்டன் ஹொட்டலில் சடலமாக கிடந்த இந்திய இளைஞர்! கணவரை நினைத்து சாப்பிடாமல் கதறும் கர்ப்பிணி மனைவி
லண்டனில் வசிக்கும் இந்திய இளைஞர் ஹொட்டல் அறையில் சடலமாக கிடந்த நிலையில் அவர் இறப்பு செய்தியை அறிந்ததில் இருந்து கர்ப்பிணி மனைவி உணவருந்தாமல் பட்டினியாக அழுது கொண்டிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் ஜம்முவை சேர்ந்த சுஷீல்குமார். இவர் லண்டனில் வசித்து வந்தார், கடந்த சனிக்கிழமையன்று Southallல் அவர் தங்கியிருந்த ஹொட்டலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
அதன்படி ஹொட்டல் ஊழியர்கள் போன் செய்தும் அறை கதவை தட்டியும் அவர் பதிலளிக்கவில்லை. இதையடுத்து சந்தேகமடைந்த அவர்கள் மாற்று சாவியை வைத்து கதவை திறந்த போது கதவுக்கு அருகிலேயே இறந்து கிடந்திருக்கிறார்.
இது குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து சுஷீல்குமார் சடலத்தை கைப்பற்றினார்கள். அவர் மரணத்தில் சந்தேகம் இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அதே நேரம் இறப்புக்கான காரணம் குறித்து இன்னும் தெரியவில்லை. இந்தியாவில் உள்ள சுஷீல்குமார் உறவினர் நீரஜ் கூறுகையில், சுஷீல்குமார் போர்ச்சுகல் நாட்டிற்கு கடந்த 2012ல் வேலைக்காக சென்றார். பின்னர் 2020ல் பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தார்.
அங்குள்ள ஆசிய உணவகத்தில் வேலை செய்து வந்த போது கொரோனா சமயத்தில் அவரின் வேலை பறிபோய்விட்டது. இதையடுத்து சொந்த ஊருக்கு திரும்பின்னர், பின்னர் மீண்டும் கடந்த மாதம் லண்டனுக்கு வேலை தேடி சென்றார்.
அங்கு ஹொட்டலில் தங்கியிருந்த போது தான் இறந்திருக்கிறார். சுஷீல்குமாருக்கு ஒரு வகையான தோல் நோய் இருந்தது, அதன் காரணமாக உடலில் கொப்பளம் ஏற்பட்டு அடிக்கடி உடல்நிலை பாதிக்கும். ஆனால் அது உயிருக்கு ஆபத்தான நோய் கிடையாது என்றே மருத்துவர்கள் கூறினர்.
அப்படினால் அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் அல்லது தற்கொலையோ செய்திருக்கிலாம். ஆனால் மாரடைப்பு என்றால் எப்படி கதவுக்கு அருகே இறந்துகிடந்தார்? அவர் மிகவும் ஆரோக்கியமாக இருந்தார்.
அதே போல தற்கொலை செய்யும் எண்ணம் எல்லாம் அவருக்கு வராது. சுஷீல்குமாருக்கு ஷிவானி என்ற மனைவியும் மூன்று வயதில் கைரா என்ற மகளும் உள்ளனர். விரைவில் ஷிவானி இரண்டாம் குழந்தையை பெற்றெடுக்கவுள்ளார். கணவர் இறந்த செய்தி வந்ததில் இருந்து சாப்பிடாமல் அழுது கொண்டே வேதனையில் இருக்கிறார்.
சுஷீல்குமார் சடலத்தை இந்தியாவுக்கு கொண்டு வர அரசாங்கமும், அதிகாரிகளும் தான் உதவ வேண்டும் என கூறியுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவிக்கையில், விவகாரம் தொடர்பில் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் எடுத்துரைத்துள்ளேன். இந்திய உயர் ஸ்தானிகரிடமும் பேசுகிறோம்.
விரைவாக உடலை இந்தியா கொண்டு வர அவர் உறுதியளித்துள்ளார் என தெரிவித்துள்ளார்.