தங்க நாணயம், ஆப்பிள் வாட்ச் உடன்..,அமீரகத்தின் உயரிய தொழிலாளர் விருதை வென்ற இந்தியர்
ஐக்கிய அரபு எமிரேட்ஸின்(UAE) தொழிலாளர் சந்தை விருதினை கேரளாவை பூர்வீகமாக கொண்ட அனாஸ் கதியரக்கம் வென்றுள்ளார்.
உயரிய விருது
கேரளாவை பூர்வீகமாக கொண்ட அனாஸ் கதியரக்கம்(Anas Kadiyarakam) திறமையான பணியாளர்கள் பிரிவில் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு எமிரேட்ஸ் தொழிலாளர் சந்தை விருதை பெற்றுள்ளார்.

திறமையான தொழிலாளர்கள் துணைப் பிரிவின் நிர்வாகம் மற்றும் நிர்வாகிகள் பிரிவில் கதியரக்கம் வெற்றி பெற்று இந்த விருதினை பெற்றிருப்பதாக கல்ஃப் நியூஸ் தகவல் தெரிவித்துள்ளது.
கதியரக்கம் இந்த உயரிய விருதினை எமஸ்டீல் நிறுவனத்தின் சைபர் செக்யூரிட்டி தலைவர் அப்துல்லா அல்ப்ரிக்கியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இது ஐக்கிய அரபு எமிரேட்ஸில்(UAE) தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாக கருதப்படுகிறது.
பர்ஜீல் ஹோல்டிங்ஸின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் LLH மருத்துவமனையில் அனாஸ் கதியரக்கம் மனிதவள மேலாளராக பணியாற்றி வருகிறார்.

பிரம்மாண்ட வெகுமதி
கதியரக்கம் பெற்ற விருது கோப்பையுடன் சேர்த்து திர்ஹம் 100,000 ரொக்கப் பரிசும் (ரூ.24 லட்சம்)வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் தங்க நாணயம், ஆப்பிள் வாட்ச் மற்றும் பாஸா பிளாட்டினம் கார்டு ஆகியவற்றை உள்ளடக்கிய வெகுமதி பொதியும் விருதுடன் இணைந்து வழங்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |