துபாயில் லொட்டரியில் ஒரு மில்லியன் டொலர்கள் பரிசு வென்ற இந்திய வம்சாவளியினர்
ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் இந்திய வம்சாவளியினர் ஒருவருக்கு லொட்டரியில் ஒரு மில்லியன் டொலர்கள் பரிசு விழுந்துள்ளது.
500ஆவது வெற்றியாளர்
இந்திய வம்சாவளியினரான வேணுகோபால் (Venugopal Mullacheri) என்பவர் அமீரகத்திலுள்ள Ajman நகரில் தகவல் தொழிநுட்பத் துறையில் பணி செய்துவருகிறார்.
லொட்டரிச்சீட்டு வாங்கும் வழக்கம் கொண்டவரான வேணுகோபால், ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி வாங்கிய லொட்டரிச்சீட்டு ஒன்றிற்கு ஒரு மில்லியன் டொலர்கள் பரிசு விழுந்துள்ளது.
இலங்கை மதிப்பில் அது சுமார் 29 கோடி ரூபாய் (29,86,31,194.00) ஆகும்.
இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், வேணுகோபால், Dubai Duty Free Millennium Millionaire லொட்டரியில் பரிசு வென்ற 500ஆவது நபர் ஆவார்.
அத்துடன், அந்த லொட்டரியில் ஒரு மில்லியன் டொலர்கள் பரிசு வென்ற 249ஆவது இந்தியர் என்ற பெருமையும் வேணுகோபாலுக்குக் கிடைத்துள்ளது.