இத்தாலியில் இந்திய தொழிலாளிக்கு செய்த மனிதத்தன்மை இல்லாத செயல்: பிரதமர் கண்டனம்
இத்தாலியில் இயந்திர விபத்தில் கை துண்டிக்கப்பட்ட இந்தியர் பரிதாபமாக உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியில் இந்தியருக்கு நேர்ந்த பயங்கரம்
இத்தாலியில் நிகழ்ந்த ஒரு மனிதத்தன்மை இல்லாத சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்துள்ளது. 31 வயதான இந்திய குடியுரிமை பெற்ற சத்னம் சிங்( Satnam Singh) என்பவர் விபத்து ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அறிக்கைகளின்படி, ரோம் அருகே உள்ள ஒரு காய்கறி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, கனரக வேளாண்மை இயந்திரத்தில் சிக்கி அவரது கை துண்டிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மருத்துவ உதவி பெற வேண்டிய நிலையில், சிங்கின் முதலாளி, அண்டோனெல்லோ லோவாடோ, கொடூரமான முடிவை எடுத்தார். அவர், சிங்கையும் அவரது மனைவியையும் வேனில் ஏற்றி, அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் சாலையோரம் விட்டுவிட்டு சென்றுவிட்டார்.
உதவி கிடைக்காமல், ரத்தப்போக்கு காரணமாக சிங்கின் நிலை மோசமடைந்தது. பின்னர் அவர் கண்டுபிடிக்கப்பட்டு, ரோமில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இருப்பினும், மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இத்தாலி பிரதமர் கண்டனம்
இந்த சம்பவம் இத்தாலியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் செய்த மனிதத்தன்மை இல்லாத செயல்(Giorgia Meloni), சிங்கிற்கு நடந்த கொடுமை "மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்டது" என்றும் இத்தாலிய மக்களின் மதிப்பீடுகளை பிரதிபலிக்காத செயல் என்றும் கண்டித்தார்.
மேலும், இதற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
ரோமில் உள்ள இந்திய தூதரகம் சிங்கின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து ஆதரவு அளித்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |