வெளிநாடுகளுக்கு குடிபெயரும் இந்திய கோடீஸ்வரர்கள்.., அதிகமானோர் தேர்வு செய்யும் நாடு இது தான்
இந்தியாவில் உள்ள குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையிலான கோடீஸ்வரர்கள் இந்த ஆண்டில் வெளிநாடுகளுக்கு குடிபெயர்வதாக அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.
இந்திய கோடீஸ்வரர்கள்
அண்மையில், ஹென்லி அண்டு பார்ட்னர்ஸ் (Henley & Partners) அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தது. அதில், இந்தியாவில் உள்ள குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையிலான கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயர்வதாக தெரிவித்துள்ளது.
அதிலும் குறிப்பாக பெரும்பாலான இந்திய கோடீஸ்வரர்கள்அதிகமானோர் ஐக்கிய அரபு அமீரகத்தை தேர்வு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து இந்த வருடத்தில் மட்டும் சுமார் 4300 கோடீஸ்வரர்கள் வெளியேறியுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த வருடம் இந்த எண்ணிக்கை 5100 ஆக இருந்தாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் இந்தியா 3 -வது இடத்திலும், இங்கிலாந்து 2 -வது இடத்திலும், சீனா முதல் இடத்திலும் உள்ளது. உலக அளவில் இந்த ஆண்டில் மட்டும் 1.28 லட்சம் கோடீஸ்வரர்கள் குடிபெயர்ந்துள்ளனர்.
இதில் குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்காவுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகாமவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் அதற்கு மேற்பட்ட சொத்து மதிப்பு கொண்டவர்கள் தான் இந்த அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு, வரிச் சலுகைகள், ஓய்வூதிய வாய்ப்புகள், வணிக வாய்ப்புகள், சாதகமான வாழ்க்கை முறைகள், குழந்தைகளுக்கான கல்வி, சுகாதாரம் ஆகிய காரணங்களுக்காக குடிபெயர்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |