21 முறை ஓம் ஸ்ரீராம் எழுதிய பின்னரே பொறுப்பேற்ற இந்திய அமைச்சர்!
21 முறை ஓம் ஸ்ரீராம் எழுதிய பின்னரே மத்திய அமைச்சராக எம்.பி.கே.ராம்மோகன் நாயுடு பொறுப்பேற்று கொண்டார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 543 இடங்களில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைத்துள்ளது.
கடந்த ஜூன் 9 -ம் திகதி பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அவருடன் சேர்ந்து புதிய அமைச்சரவையில் 71 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
21 முறை ஓம் ஸ்ரீராம்
மக்களவை தேர்தலில் ஆந்திராவில் பாஜக, ஜனசேனா அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கூட்டணி 21 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது.
இதில் தெலுங்கு தேசம் கூட்டணி மட்டும் 16 தொகுதிகளில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணில் இணைந்து பாஜக அரசுக்கு உறுதுணையாக இருக்கிறது.
இதில், ஸ்ரீகாகுளம் மக்களவை தொகுதி எம்.பி.கே.ராம்மோகன் நாயுடுவுக்கு (36) இந்திய அமைச்சரவையில் விமான துறை வழங்கப்பட்டது.
இவர் கடந்த வியாழக்கிழமை விமான துறை அமைச்சராக டெல்லியில் பொறுப்பேற்றார். அப்போது, காகிதத்தில் 21 முறை ஓம் ஸ்ரீராம் எழுதிய பின்னரே அந்த கோப்பில் கையெழுத்திட்டார்.
இதுகுறித்து எம்பி கே.ராம்மோகன் நாயுடு கூறுகையில், " சாதாரண எளிய மக்களும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்பதே எனது லட்சியம். இதனை நிறைவேற்றுவேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |