பிரித்தானியா செல்லும் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்: 22 ஆண்டுகளுக்குப் பின் சுற்றுப்பயணம்
அரசு முறை பயணமாக கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரித்தானியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
பிரித்தானியா சென்ற ராஜ்நாத் சிங்
இருநாடுகள் இடையிலான பாதுகாப்பு மற்றும் தொழில்துறை குறித்து முக்கிய விவாதங்கள் நடத்தவும் தலைவர்களை சந்தித்து பேசவும் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக பிரித்தானியாவுக்கு இன்று புறப்பட்டு சென்றார்.
பிரித்தானிய தலைநகர் லண்டனில் பாதுகாப்புத் துறை அமைச்சர், தலைமை அதிகாரி மற்றும். தொழில்துறை தலைவர்களை சந்தித்து இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசவுள்ளார்.
இந்த சந்திப்பின் போது இருதரப்பு பாதுகாப்பு மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் காமன்வெல்த் மேம்பாட்டு விவகாரங்களுக்கான வெளியுறவுச் செயலாளர் டேவிட் கேமரூன் ஆகியோரையும் ராஜ்நாத் சிங் சந்தித்து பேச உள்ளார்.
அத்துடன் லண்டனில் உள்ள மகாத்மா காந்தி, அம்பேத்கர் நினைவிடங்களை பார்வையிட்டு, இந்திய வம்சாவளியினருடன் ராஜ்நாத் சிங் உரையாடுகிறார்.
கடந்த 2002ம் ஆண்டு ஜனவரி மாதம் 22ம் திகதி பாஜக கூட்டணி அரசில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ஜாா்ஜ் ஃபொ்னாண்டஸ் அவர்களுக்கு பிறகு கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு கழித்து இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரித்தானியா சென்றுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |