இந்திய அமைச்சரின் ஷூவை கழற்றிவிடும் அரசு அதிகாரி.., சர்ச்சையாகும் வீடியோ
மத்திய அமைச்சரின் ஷூவை கழற்றி விட்டு அவரது கால் சட்டையை ஒருவர் சரி செய்யும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வைரலாகும் வீடியோ
இந்திய மாநிலமான ஜார்கண்ட்டிற்கு மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கதுரை இணை அமைச்சர் சதீஸ் சந்திர தூபே வருகை தந்திருந்தார்.
அவர் அங்குள்ள தன்பாத் நகரில் இருக்கும் சுரங்கம் ஒன்றை பார்வையிடுவதற்காக வந்திருந்தார். அதற்காக சிறப்பு உபகரணங்களை அணிந்து தயாராகினார்.
பாரத் கோக்கிங் கோல் லிமிடெட் (பிசிசிஎல்) என்ற அரசின் நிலக்கரி நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜராக அரிந்தாம் முஸ்தாபி (Arindam Mustafi) என்பவர் இருந்து வருகிறார்.
இவர், மத்திய அமைச்சர் சதீஸ் சந்திர தூபேவின் ஷூவை கழற்றிவிட்டு அவரது அணிந்திருந்த பைஜாமா கால் சட்டையின் கயிறை அட்ஜஸ்ட் செய்து உதவி செய்துள்ளார்.
அப்போது, மத்திய அமைச்சர் சதீஸ் சந்திர தூபே ரிலாக்ஸாக ஷோபாவில் அமர்ந்திருந்தார். அவருக்கான பணிவிடைகளை அரிந்தாம் முஸ்தாபி செய்து கொண்டிருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்சையையாக மாறியுள்ளது. இதனிடையே, பிசிசிஎல் அதிகாரிகள் தங்களின் ஊழலை மறைப்பதற்காக இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |