மேற்கு அரபிக் கடலில் கப்பல்களை நிலைநிறுத்திய இந்திய கடற்படை
கடற்கொள்ளை சம்பவங்களால் மேற்கு அரபிக் கடலில் கப்பல்களை இந்திய கடற்படை குவித்துள்ளது.
கப்பல்கள் குவிப்பு
மேற்கு அரேபியக் கடலில் சரக்குக் கப்பல்கள் மீது கடற்கொள்ளையர் மற்றும் ஹவுத்தி தாக்குதல்கள் அதிகரித்து வருவது வழக்கமாக மாறிவிட்டது.
இதனால், சரக்குகளை கொள்ளையடிப்பதும், பயணிகளை சிறை பிடித்து செல்வதும் நடைபெற்று வந்தது. இந்த சூழ்நிலையை எதிர்கொள்ளும் பணியில் இந்திய கடற்படை ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக மத்திய அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கடந்த ஆண்டில் 30க்கும் மேற்பட்ட கப்பல்களை மேற்கு அரபிக் கடலில் நிலைநிறுத்தி விரிவான நடவடிக்கைகளை இந்திய கடற்படை மேற்கொண்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் மற்றும் கடற்கொள்ளை என 25-க்கும் மேற்பட்ட சம்பவங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மேற்கொள்ளப்பட்டது.
இந்த அணுகுமுறையால் 400 க்கும் மேற்பட்ட நபர்களை மீட்க வழிவகுத்தது. அவர்களின் நாடு எதுவாக இருந்தாலும், நம்பகமான பாதுகாப்பு நிலையை மேம்படுத்துகிறது.
இதனால், 90 லட்சம் மதிப்புள்ள மெட்ரிக் டன் சரக்குகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.34,117 கோடி ஆகும்" என்று கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |