பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயில் இருந்து விமான எரிபொருள் - இந்திய நிறுவனத்தின் திட்டம்
இந்தியாவில் வீடுகள் மற்றும் கடைகளில் சமையலில் பொறிக்க பயன்படுத்தப்படும் எண்ணெய், ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் உபயோகிக்கப்படுவதில்லை.
சமையல் எண்ணெயில் இருந்து SAF
இந்நிலையில் அந்த எண்ணெய்களை சேகரித்து, நிலையான விமான எரிபொருளை (SAF - Sustainable aviation fuel) உற்பத்தி செய்ய இந்திய ஆயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்திய அரசின் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பரேஷன், பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து SAF தயாரிப்பதற்கான ISCC CORSIA சான்றிதழை சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பிடமிருந்து பெற்றுள்ளது.
SAF என்பது பெட்ரோலியம் அல்லாத மூலப்பொருளில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு மாற்று எரிபொருளாகும். இது விமான போக்குவரத்தில் இருந்து உமிழ்வை குறைக்கும்.
வழக்கமான ஜெட் எரிபொருளில் 50 சதவீதம் வரை இதனை கலக்கலாம். 2027 ஆம் ஆண்டு முதல் சர்வதேச விமான நிறுவனங்களுக்கு விற்கப்படும் எரிபொருட்களில் 1% SAP கலக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளது.
சேகரிப்பது சவால்
இது குறித்து பேசிய இந்தியன் ஆயில் கார்பரேஷன் சேர்மன் Arvindar Singh Sahney, "நாட்டிலேயே இந்த சான்றிதழை பெற்றுள்ள ஒரே நிறுவனம் இந்தியன் ஆயில் தான்.
ஹரியானா மாநிலம் பானிபட்டில் உள்ள இந்தியன் ஆயிலின் சுத்திகரிப்பு நிலையம், இந்த ஆண்டின் இறுதியில், ஆண்டுக்கு 25,000 டன் SAP உற்பத்தி செய்ய தொடங்கும்.
2027 ஆம் ஆண்டில் கட்டாயமாக்கபட்ட 1% SAP கலப்பு தேவையை பூர்த்தி செய்ய இந்த உற்பத்தி போதுமானதாக அமையும். இதற்கான எண்ணெய்கள் ஹோட்டல் மற்றும் உணவகங்களில் இருந்து சேமிக்கப்படும்.
இந்த எண்ணெய் நாட்டில் அதிகளவில் கிடைக்கிறது. அதனை சேகரிப்பது தான் சவாலான ஒன்று. பெரிய ஹோட்டல்களில் இருந்து சேகரிப்பது எளிதாக இருந்தாலும், வீடுகள் உட்பட சிறு பயனர்களிடமிருந்து சேகரிக்க தீர்வு காண வேண்டும்." என கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |