இந்திய இளம்பெண் கொலை வழக்கில் கணவர் மீது கூடுதல் குற்றச்சாட்டுகள் பதிவு
பிரித்தானியாவில் தன் கணவருடன் வாழ்ந்துவந்த இந்திய இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது கணவர் மீது கூடுதல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்திய இளம்பெண் கொலை வழக்கு
கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் 14ஆம் திகதி, இந்திய இளம்பெண்ணான ஹர்ஷிதா ப்ரெல்லா (24), கிழக்கு லண்டனில் கார் ஒன்றின் பின்புறத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
உடற்கூறு ஆய்வில், அவர் கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது.
ஹர்ஷிதாவைக் கொலை செய்ததாக அவரது கணவரான பன்கஜ் லம்பாவை (23) பொலிசார் தேடிவருகிறார்கள்.
அவர் பிரித்தானியாவிலிருந்து தப்பியோடிவிட்ட நிலையில், சர்வதேச அளவில் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
கூடுதல் குற்றச்சாட்டுகள்
இந்நிலையில், இந்த வழக்கில், பங்கஜ் மீது தற்போது வன்புணர்வு முதலான சில குற்றச்சாட்டுகளும் கூடுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதேநேரத்தில், இந்தியாவிலும் டெல்லி பொலிசார் பங்கஜ் மீது வரதட்சிணைக் கொலை வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.
மேலும், பங்கஜின் தாய் சுனில் தேவி, தந்தை தர்ஷன் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரது சகோதரியான உமாவையும் தேடிவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |