அமெரிக்காவில் இந்தியர் ஒருவருக்கு நிகழ்ந்த பயங்கரம்: திகிலை ஏற்படுத்தியுள்ள காட்சிகள்
அமெரிக்காவில், இந்தியர் ஒருவர், அவரிடம் வேலை செய்யும் ஊழியர் ஒருவரால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இந்தியர் ஒருவருக்கு நிகழ்ந்த பயங்கரம்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள டாலஸ் நகரில் மோட்டல் ஒன்றை நடத்திவருகிறது இந்தியரான சந்திர நாக மல்லையா (Chandra Nagamallaiah) என்பவரது குடும்பம்.
நேற்று முன்தினம், புதன்கிழமை, நாக மல்லையாவுக்கும் கோபோஸ் மார்ட்டினெஸ் (Cobos Martinez) என்னும் அவரிடம் வேலை செய்யும் ஊழியருக்கும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பழுதான வாஷின் மெஷின் ஒன்றை பயன்படுத்தவேண்டாம் என நாக மல்லையா கோபோஸிடம் கூறினாராம்.
ஆனால், நேரடியாக கோபோஸிடம், பேசாமல், மற்றொரு ஊழியரை அழைத்து அவரிடம் அந்த வாஷிங் மெஷின் குறித்து சொல்லி, அதை கோபோஸுக்கு மொழி பெயர்க்கச் சொன்னாராம் நாக மல்லையா.
தன்னிடம் நேரடியாக பேசாமல் மற்றொருவரிடம் சொல்லி அதை மொழிபெயர்க்கச் சொன்னதால் ஆத்திரமடைந்த கோபோஸ், பட்டாக்கத்தி ஒன்றை எடுத்துக்கொண்டு நாக மல்லையாவைத் துரத்தினாராம்.
நாக மல்லையாவின் மனைவியும் 18 வயது மகனும் கோபோஸை தடுக்க முயன்றும் கேட்காமல், தப்பி ஓட முயன்ற நாக மல்லையாவை பல முறை தாக்கி, அவரது தலையை வெட்டியுள்ளார் கோபோஸ்.
திகிலை ஏற்படுத்தியுள்ள காட்சிகள்
ஊடகங்களில் வெளியிட இயலாத அளவுக்கு பயங்கரமாக காட்சியளிக்கும் வீடியோ ஒன்றில், கோபோஸ் நாக மல்லையாவின் தலையை காலால் எட்டி உதைக்கும் காட்சிகளும், பின் அந்த தலையை கையில் எடுத்துக்கொண்டு குப்பைத்தொட்டியை நோக்கிச் செல்லும் காட்சிகளும் இடம்பெற்று திகிலை உருவாக்கியுள்ளன.
நாக மல்லையாவின் பயங்கர மரணம் குறித்து சமூக ஊடகமான எக்ஸில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள இந்திய தூதரகம், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டுள்ளதுடன், அந்நாரின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்துவருவதாகவும் தெரிவித்துள்ளது.
Consulate General of India, Houston, condoles the tragic death of Mr. Chandra Nagamallaiah, an Indian National, killed brutally at his workplace in Dallas, Tx.
— India in Houston (@cgihou) September 11, 2025
We are in touch with the family and offering all possible assistance. The accused is in the custody of Dallas Police.…
கோபோஸ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பயங்கர சம்பவம் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்களிடையே கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |