ட்ரம்ப் வரியில் இருந்து தப்பிக்க... கைதிகளை விடுவித்த ஐரோப்பிய நாடொன்றின் ஜனாதிபதி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பில் இருந்து தப்பிக்கும் பொருட்டு, 50க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவிக்க பெலாரஸ் ஜனாதிபதி ஒப்புக்கொண்டுள்ளார்.
பெலாரஸ் ஜனாதிபதி
ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரி என்று அடையாளப்படுத்தப்படும் அலெக்சாண்டர் லுகாஷென்கோவுக்கும் அமெரிக்க அதிகாரிகளுக்கும் இடையே மின்ஸ்கில் நடந்த திடீர் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த அசாதரண ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கைதிகள் விடுவிப்பது தொடர்பில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில், முந்தைய தொடர்புகள் ஜூன் மாதத்தில் முன்னணி எதிர்க்கட்சி ஆர்வலர் சியாரெய் சிகானௌஸ்கியை விடுவிக்க வழிவகுத்தன.
ஆனால், தற்போது 50க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவிக்க பெலாரஸ் ஜனாதிபதி ஒப்புக்கொண்டுள்ளது எதிர்பாராதது என்றே கூறுகின்றனர். கடந்த 31 வருடங்களாக பெலாரஸ் ஜனாதிபதியாக பொறுப்பில் இருக்கும் லுகாஷென்கோவால் இதுவரை வழங்கப்பட்ட அரசியல் கைதிகளுக்கான மிகப்பெரிய மன்னிப்பு இதுவாகும்.
1,300 கைதிகளில்
இதில் பிரித்தானியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 52 கைதிகள் விடுவிக்கப்பட்டனர். மேலும், கடந்த மாதம் லுகாஷென்கோவுடன் தொலைபேசியில் பேசியதிலிருந்து ட்ரம்ப் விடுதலை கோரி வரும் 1,300 கைதிகளில் இந்த எண்ணிக்கை மிகக் குறைவு என்றே கூறுகின்றனர்.
ஆனால் அனைத்து வகையான எதிர்ப்புகளும் அரசியல் சுதந்திரங்களும் நடைமுறையில் அழிக்கப்பட்ட ஒரு நாட்டில் இருந்து இப்படியான ஒரு முடிவு என்பது அரிதாகவே பார்க்கப்படுகிறது.
அத்துடன் பெலாரஸ் தேசிய விமான நிறுவனமான பெலாவியா மீதான சில தடைகளும் நீக்கப்பட்டுள்ளது. உக்ரைன் படையெடுப்பிற்குப் பிறகு, ரஷ்யா அல்லது பெலாரஸ் மீதான அமெரிக்கத் தடைகள் நிரந்தரமாக நீக்கப்படுவதும் இதுவே முதல் முறை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |