வெளிநாட்டு சுற்றுலா சென்ற இந்திய வம்சாவளி இளம்பெண்: வெளியாகியுள்ள துயரச் செய்தி
அமெரிக்க பல்கலை ஒன்றில் பயின்றுவந்த இந்திய இளம்பெண் ஒருவர் வெளிநாடொன்றிற்கு சுற்றுலா சென்றபோது மாயமானார்.
தற்போது, அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ள விடயம் துயரத்தையும் அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது.
மாயமான இந்திய வம்சாவளி இளம்பெண்
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலையில் பயின்றுவந்தவர் இந்திய வம்சாவளியினரான சுதிக்ஷா (Sudiksha Konanki, 20) என்னும் இளம்பெண்.
சுதிக்ஷா தனது சக மாணவ மாணவியர் ஐந்து பேருடன் டொமினிக்கன் குடியரசுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 4.50 மணியளவில் தாங்கள் தங்கியிருந்த ஹொட்டலின் அருகிலுள்ள கடற்கரையில் கடைசியாக காணப்பட்டுள்ளார். அதற்குப் பிறகு அவர் மாயமாகிவிட்டார்.
புதன்கிழமை இரவு, சுதிக்ஷா, ஆறு பேருடன் அந்த கடற்கரைக்குச் சென்றிருந்த நிலையில், அவர்களில் ஐந்து பேர் தாங்கள் தங்கியிருந்த ஹொட்டலுக்குத் திரும்ப, சுதிக்ஷாவும் மற்றொரு இளைஞரும் மட்டும் கடற்கரையிலேயே இருந்துள்ளார்கள்.
இந்நிலையில், அவர்கள் இருவரும் நீந்தச் சென்றிருக்கலாம் என்றும், சுதிக்ஷா கடலில் மூழ்கியிருக்கலாம் என்றும் தாங்கள் கருதுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில், சுதிக்ஷாவுடன் கடைசியாக காணப்பட்ட இளைஞரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |