100 வருட கணித சிக்கலுக்கு தீர்வு வழங்கிய இந்திய வம்சாவளி மாணவி
இந்திய வம்சாவளி மாணவி திவ்யா 100 வருட கணித சிக்கலுக்கு தீர்வு கண்டுபிடித்துள்ளார்.
திவ்யா தியாகி
இந்திய வம்சாவளி மாணவியான திவ்யா தியாகி(Divya Tyagi), அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தில், விண்வெளிப் பொறியியலில் முதுநிலைப் பட்டக்கல்வி பயின்று வருகிறார்.
திவ்யா தியாகி, 100 ஆண்டுகளாக தீர்க்க முடியாத கணித சமன்பாடு ஒன்றிற்கு தீர்வு வழங்கியுள்ளார்.
1928 ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் காற்றியக்கவியலாளர் ஹெர்மன் கிளாவர்ட்(Hermann Glauert), உருவாக்கிய சிக்கலான கணித பிரச்சனைக்கு திவ்யா தற்போது தீர்வு கண்டுள்ளார்.
காற்றாலை ஆற்றல் தொழில்நுட்பம்
கிளாவர்ட்டின் மாதிரி செயல்திறனை அதிகப்படுத்தியிருந்தாலும், டர்பைன் ரோட்டரில் செயல்படும் விசைகள் அல்லது காற்றழுத்தத்தின் கீழ் கத்திகள் எவ்வாறு வளைகின்றன போன்ற முக்கியமான காரணிகளில் அது கவனம் செலுத்தவில்லை.
திவ்யாவின் கண்டுபிடிப்பு, பொறியாளர்கள் ரோட்டார் பிளேடு வடிவம், திருப்பம் மற்றும் கோணத்தை மேம்படுத்த உதவுவதோடு, இறுதியில் விசையாழிகளின் ஆற்றல் வெளியீட்டை மேம்படுத்துகிறது.
மேலும், விசையாழிகள் காற்றோடு எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வழங்குகிறது.
இந்த தீர்வு மூலம், காற்றாலை ஆற்றல் உற்பத்தியில், செயல்திறனை மேம்படுத்தவும், செலவுகளைக் குறைக்கவும் முடியும் என கூறப்படுகிறது.
மின் உற்பத்தியை அதிகரிக்க சிறந்த ஓட்ட நிலைமைகளை தீர்மானிப்பதன் மூலம், திவ்யாவின் பணி காற்றாலை ஆற்றல் தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
இந்த ஆய்வில் திவ்யாவிற்கு வழிகாட்டிய அவரது பேராசிரியர் ஸ்வென் ஷ்மிட்ஸ்( Sven Schmitz), "திவ்யாவின் பணி உலகளவில் அடுத்த தலைமுறை காற்றாலை விசையாழிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்" என பாராட்டியுள்ளார்.
அந்தோணி இ. வோல்க் விருது
இந்த சாதனையை அங்கீகரிக்கும் விதமாக, தியாகி சிறந்த விண்வெளி பொறியியல் ஆய்வறிக்கைக்கான அந்தோணி இ. வோல்க் விருது(Anthony E. Wolk Award) வழங்கப்பட்டுள்ளது.
திவ்யா தியாகி, தற்போது கணக்கீட்டு திரவ இயக்கவியலில் (CFD) அதிநவீன ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறார்.
மேலும், அமெரிக்க கடற்படையிடமிருந்து முக்கிய ஆதரவைப் பெற்ற, ஹெலிகாப்டர் விமான உருவகப்படுத்துதல்களை மேம்படுத்துவதிலும், விமானப் பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |