விண்வெளிக்கு செல்லும் இந்திய வம்சாவளி அனில் மேனன் - என்ன திட்டம்?

NASA Indian Origin International Space Station
By Karthikraja Jul 11, 2026 07:47 AM GMT
Report

இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா விண்வெளி வீரரான அனில் மேனன், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) ஜூலை 14 ஆம் திகதி பயணம் மேற்கொள்ள உள்ளார்.

நாசா விண்வெளி பயணம்

விண்வெளிக்கு செல்லும் இந்திய வம்சாவளி அனில் மேனன் - என்ன திட்டம்? | Indian Origin Anil Menon To Travel To Iss Space

கஜகஸ்தானில் உள்ள பைக்கோனூர் விண்வெளி ஏவுதளத்திலிருந்து ரோஸ்கோஸ்மோஸ் சோயுஸ் எம்எஸ்-29 விண்கலத்தில் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

அவருடன் ரஷ்ய விண்வெளி வீரர்களான பியோத்ர் துப்ரோவ், அன்னா கிகினா ஆகியோர் செல்ல உள்ளனர்.

விண்வெளிக்கு செல்லும் இந்திய வம்சாவளி அனில் மேனன் - என்ன திட்டம்? | Indian Origin Anil Menon To Travel To Iss Space

விண்வெளி நிலையத்தில் 8 மாதங்கள் தங்கி, நீண்ட கால விண்வெளிப் பயணம் மனித உடலியலில் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆய்வு செய்ய உள்ளார். மேலும், எதிர்கால விண்வெளி ஆய்வுகளுக்கான புதிய மருத்துவ தொழில்நுட்பங்களைச் சோதிப்பார்.

மேலும், உயர் செயல்திறன் கொண்ட கணினிகளுக்குத் தேவையான பாகங்களின் பெருமளவு உற்பத்தியில் பயன்படுத்தப்படும் குறைக்கடத்திப் படிகங்களை விண்வெளியில் உற்பத்தி செய்வது குறித்து ஆய்வு செய்வார். 

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் துவக்கம் - கட்டணம் எவ்வளவு? எந்த வழித்தடம்?

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் துவக்கம் - கட்டணம் எவ்வளவு? எந்த வழித்தடம்?

யார் இந்த அனில் மேனன்?

கேரளாவைச் சேர்ந்த சங்கரன் மேனன் என்பவருக்கும், உக்ரைனைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் அமெரிக்காவின் மினுசோட்டா மாநிலத்தில் உள்ள மின்னியாபொலிஸ் என்ற நகரத்தில் 1976 ஆம் ஆண்டில் பிறந்தவர் அனில் மேனன்.

1999 ஆம் ஆண்டில் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் நியூரோபயாலஜியில் இளங்கலைப் பட்டமும், 2004 ஆம் ஆண்டில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியலில் முதுகலைப் பட்டமும், 2006 ஆம் ஆண்டில் ஸ்டான்போர்டு மெடிகல் ஸ்கூலில் MD (Doctor of Medicine) பட்டமும் பெற்றிருக்கிறார்.

மருத்துவரான இவர், 2010 ஆம் ஆண்டில் ஹைட்டியில் ஏற்பட்ட நிலநடுக்கம், 2015 ஆம் ஆண்டில் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் 2011 ஆம் ஆண்டில் ரெனோ விமானக் கண்காட்சி விபத்து ஆகியவற்றின் போது முதல் மீட்பாளராகப் பணியாற்றியுள்ளார். 

விண்வெளிக்கு செல்லும் இந்திய வம்சாவளி அனில் மேனன் - என்ன திட்டம்? | Indian Origin Anil Menon To Travel To Iss Space

இமயமலை மீட்பு சங்கத்துடன் இணைந்து, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் மலையேறுபவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கி பணியாற்றியுள்ளார். மேலும், இந்தியாவில் ஓராண்டு காலம் தங்கியிருந்து, போலியோ தடுப்பூசி முயற்சிகளைப் பற்றி ஆய்வு செய்து ஆதரவளித்துள்ளார்.

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் முதல் ஃப்ளைட் சர்ஜனாக இருந்த இவர், முதன் முதலில் ஸ்பேஸ் எக்ஸ் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பிய Demo-2 மிஷனிலும் பங்காற்றியிருக்கிறார். 

நாசாவின் பல்வேறு திட்டங்களிலும் Crew Flight Surgeon ஆகவும் பணியாற்றியிருக்கிறார். முன்னதாக அமெரிக்கா விமானப்படையில், ஃப்ளைட் சர்ஜனாகவும் (Flight Surgeon) பணியாற்றியிருக்கிறார். 

ஜனவரி 2022 ஆம் ஆண்டில் நாசா விண்வெளி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 2 ஆண்டுகள் விண்வெளி வீரருக்கான பயிற்சியை பெற்றார்.

விண்வெளிக்கு செல்லும் இந்திய வம்சாவளி அனில் மேனன் - என்ன திட்டம்? | Indian Origin Anil Menon To Travel To Iss Space

இவரின் மனைவி அண்ணா மேனனும் நாசா விண்வெளி வீரர் ஆவார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US