பீட்சா சாப்பிட்டுவிட்டு... சகோதரன் மீது துப்பாக்கி சூடு? இந்திய குடும்பத்திற்கு நடந்த கொடூரம்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ரிச்மண்ட் ஹில் பகுதியில் நிகழ்ந்த சோகமான சம்பவம் ஒன்று குடும்பம் ஒன்றை கடும் துயரில் ஆழ்த்தி உள்ளது.
சகோதரை சுட்டுக் கொன்ற நபர்
சனிக்கிழமை இரவு, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 33 வயதான கரம்ஜித் முல்டானி என்பவர் தனது தம்பி விபன்பால் (27) என்பவரை வீட்டிலேயே சுட்டுக் கொலை செய்துள்ளார்.
மேலும் கரம்ஜித்தின் 52 வயதான தாயாரும் துப்பாக்கி சூடுக்குள்ளாகியிருந்தார், ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
Karamjit Multani (right) and Vipanpal with their sister.
இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இந்நிலையில் கரம்ஜித் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் என்ற தகவல் தெரியவந்துள்ளது.
சோகத்தில் தந்தை
குடும்பத்தினர் கூறுகையில், இரு சகோதரர்களுக்கும் இடையே முன்னர் எந்த மோதல்களும் இல்லை. படுகொலை நடப்பதற்கு சற்று முன்னர் அனைவரும் ஒன்றாக பீட்சா சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருந்ததாக பாதிக்கப்பட்டவரின் தந்தை பூபேந்தர் சிங் தெரிவித்தார்.
குடும்பத்தின் மூதாதையர் கிராமமான இந்தியாவின் பஞ்சாபின் நாரங்கபூர் கிராமம் இந்த இழப்பால் சோகத்தில் மூழ்கியுள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்னர் தனது குடும்பத்துடன் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த பூபேந்தர் சிங், தனது மகன்களின் திடீர் மற்றும் கொடூரமான மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் போராடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |